"இவர் நடுவில் படுத்தால், நான் இப்படி.. அந்தம்மா அப்படி.. அவங்க 2 பேரும்" கதறும் திமுக பிரமுகர் மனைவி

வாணியம்பாடி திமுக பிரமுகர் மீது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "படுக்கிறது கூட எப்படின்னு பார்த்தீங்கன்னா, எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்த பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்த பக்கம் படுக்கணும்... அவங்க 2 பேரும்தான் கட்டிப்பிடிச்சிட்டு படுப்பாங்க.. அதை நான் கேட்டதுக்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீ தான் தப்பா நினைக்கிறன்னு சொன்னார்.. இப்போ எனக்கும், என் குழந்தைக்கும் பாதுகாப்பு கேட்டு மனு தந்திருக்கேன்" என்று திமுக பிரமுகர் மனைவி செய்தியாளர்களிடம் கண்ணீர் பேட்டி தந்துள்ளார்.

Recommended Video

    பெண் விவகாரம்..வாணியம்பாடி சாரதிகுமார் மீது 9 வழக்குகள்

    சென்னை, அடையாறை சேர்ந்தவர் ரம்யா.. 28 வயதாகிறது.. இவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.

    அந்த மனுவில் 14 வயது மூத்த பெண்ணுடன், தன்னுடைய கணவர் சாரதி குமாருக்கு தகாத உறவு உள்ளதாகவும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ரம்யா கண்ணீர் மல்க சொன்னதாவது:

    லவ் மேரேஜ்

    லவ் மேரேஜ்

    வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிக்குமாரின் மனைவி நான். என்னுடைய பெயர் ரம்யா. எங்களுடைய லவ் மேரேஜ்தான்.. ஸ்கூல் படிக்கும்போதிருந்தே பின்னாடியே வந்து லவ் பண்ணினார்.. ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்கு வேறு மாதிரியான ரிலேஷன்சிப் இருக்கிறது என எனக்கு தெரிய வந்தது. அந்த லேடி அவரை விட 14 வயசு பெரியவங்க.. அவரை அக்கா, அக்கா என்று இவர் கூப்பிடவும், நான் எதுவும் தப்பா நினைக்கல.

    சினிமா

    சினிமா

    ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல்தான் அக்கா முறை இல்லை, வேறு மாதிரியான ரிலேஷன்சிப் இருக்கிறது என்று எனக்கு தெரிய வந்தது. அந்த அம்மா எப்படின்னா, எங்க வீட்டுக்கே வந்துடுவாங்க.. இல்லையென்றால் அவங்க வீட்டுக்கு எங்களை கூட்டிட்டு போய்விடுவார். படுப்பது கூட பார்த்தீங்கன்னா, எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்த பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்த பக்கம் படுக்கணும். அவங்க 2 பேரும்தான் கட்டிப்பிடிச்சிட்டு படுப்பாங்க.

    அக்கா மகள்

    அக்கா மகள்

    அதை நான் கேட்டதுக்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீ தான் தப்பா நினைக்கிற என்பார்கள். அடிப்பார்கள். ஒரு சினிமாவுக்கு போனால்கூட, அவர் நடுவில் இருப்பார், நான் இந்தப் பக்கம் நான் இருப்பேன். அந்தப் பக்கம் அந்த அம்மா இருப்பார். இதைக்கேட்டால் மிரட்டுவார்கள். இந்த நேரத்தில்தான் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதற்கு பிறகு அந்த அம்மா அவரது அக்கா மகளை, 18 வயதே ஆன அவரது அக்கா மகளை கோயம்பத்தூருக்கு அழைத்துச் சென்று ரூம் போட்டு அட்வைஸ் செய்திருக்கிறார்.

    கண்ணீர்

    கண்ணீர்

    அவனை சந்தோஷமா பாத்துக்கோ, எப்படி அவனை பாத்துக்கணும் என அட்வைஸ் பண்ணியிருக்காங்க. இதுக்கு புரூப் என்கிட்ட இருக்கு.. ஆடியோ இருக்கு.. இதெல்லாம் எனக்கு தெரிஞ்சப் பின்னர் என்னை மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கட்சி மேலிடத்திலும் சொல்லியிருக்கேன். நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் புகார் தர அறிவாலயம் போனது எப்படியோ தெரிந்து கொண்டு என்னை மிரட்டினார்கள். அதனால்தான் உரிய நடவடிக்கை எடுக்கணும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+