நடிகர் விஜய் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்! தேச குற்ற வழக்கு பதிவு செய்ய கோரும் சமூக ஆர்வலர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் விதிமீறல்கள் இருப்பதாகவும் தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த கொடியில் தேர்தல் விதிமீறல்கள் இருப்பதாகவும் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி (நேற்று) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இரு பிளிறும் போர் யானைகள், நடுவில் வாகை மலர், 28 நட்சத்திரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் விஜய்யின் கொடியில் யானை படம் இடம்பெற்றிருப்பதற்கு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து காவல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக கொடியில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான சின்னங்கள் இருப்பதாக ஆர்டிஐ செல்வம் புகார் அளித்துள்ளார்.
மேலும் கேரளா அரசின் போக்குவரத்து சின்னமான யானை, தவெக கொடியில் இடம்பெற்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இந்தியாவை அவமதிக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு தேசியக் கொடியின் நிறத்தையும் விஜய் தனது கொடியில் வைத்துள்ளார். எனவே அவர் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications