"உலகின் 8வது அதிசயம்!" பணம் வட்டி போட்டு குட்டியும் போடும்! இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பது ஈஸி
சென்னை: ஈஸியாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அப்படி பணக்காரர் ஆக விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.
இந்த உலகில் அனைவருக்குமே பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால், எப்படி பணக்காரர் ஆக வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. பலரும் பணம் சம்பாதிக்க ஷார்ட் கட் எதாவது இருக்குமா என்றே தேடுவார்கள். ஆனால், உண்மையில் பணக்காரர் ஆக எப்போதும் ஷார்ட் கட் இருந்ததே இல்லை.

பொறுமை, உழைப்பு மட்டும் இருந்தால் போதாது.. வரும் வருமானத்தைச் சரியாகச் சேமிப்பதும் அதைச் சரியாக முதலீடு செய்வதும் முக்கியமாகும். அதை எப்படி ஈஸியாக செய்யலாம் என்பது குறித்து பலரும் தொடர்ந்து ஆலோசனை தந்து வருகிறார்கள்.
பணம் சேமிப்பது எப்படி: பணத்தைச் சேமித்து வைத்தால் அது அப்படியே இருக்கும்.. அல்லது அதன் மதிப்பு பணவீக்கத்தால் குறைந்துவிடும். உதாரணமாக உங்களிடம் ஒரு லட்சம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சேமித்து வைக்கிறேன் என வீட்டில் வைத்து இருந்தால் ஓராண்டு கழித்து அது அப்படியே ஒரு லட்சமாகத் தான் இருக்கும். ஆனால், வெளியே விலைவாசி அதிகரித்து இருக்கும். ஓராண்டிற்கு முன்னால் ஒரு லட்சத்தை வைத்து வாங்க முடிந்ததை இப்போது உங்களால் வாங்க முடியாது.
நீங்கள் வங்கிகளில் பணத்தைப் போட்டாலும் குறைந்தபட்ச வட்டி தான் கிடைக்கும். இதன் காரணமாகவே சரியான இடத்தில் முதலீடு செய்வது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நீண்டகால முதலீட்டில் உங்களுக்கு வட்டிக்கு வட்டி அதாவது கூட்டு வட்டி கிடைக்கும். இதை Compound Interest என்பார்கள். இதுவே நாம் பெரும் பணக்காரர்கள் ஆக முக்கிய காரணமாக இருக்கும்.
பொருளாதார ஆலோசகர் ராஜேஷ்: இந்த Compound Interest எந்தளவுக்கு முக்கியமானது என்பதைப் பொருளாதார ஆலோசகர் கே ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார். இது குறித்து அவர், "The Power of Compounding - 8-4-3 Rule.. உலகின் எட்டாவது அதிசயம் - Compound Interest. நீண்ட காலத்திற்கு, அது எவ்வாறு உங்களுக்கு வேலை செய்கிறது? பார்ப்போமா?
முதலீடு: மாதா மாதம் ₹30,000. வருவாய்: 12% CAGR.. அப்படியானால் முதல் ₹50 லட்சம் வருவதற்கு 8 ஆண்டுகள் ஆகும். இரண்டாவது ₹50 லட்சம் வருவதற்கு 4 ஆண்டுகள் ஆகும். மூன்றாவது ₹50 லட்சம் வருவதற்கு 3 ஆண்டுகள் தான் ஆகும். இருபது வருடங்களைக் கடந்து விட்டால், ஒவ்வொரு வருடமும் உங்களது வருமானம் ₹50 லட்சம்...
The Power of Compoundingன் மகத்துவம் இதுதான். உங்களுக்குத் தேவை... நம்பிக்கை, சேமித்த சிறிது பணம், Patience - நான் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்கிறேன். அந்த முதலீடு வளரும்வரை பொறுமையுடன் காத்திருப்பேன். Consistency - நீண்ட காலத்திற்கு மாதம் தவறாமல் முதலீடு செய்வேன். Discipline - நான் முதலீடு செய்வதை நிறுத்த மாட்டேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications