Whistle: விஜய்யின் விசில் சின்னத்தால் வந்த குழப்பம்! எது தவெகவின் சின்னம்! இந்த படத்தை பாருங்க!
சென்னை: தவெகவுக்கு ஒதுக்கப்பட்ட விசில் (Whistle) சின்னமும் சுயேச்சைகளுக்கான ரோடு ரோலர் சின்னமும் ஒரே மாதிரி இருப்பதால் தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் விசில்களிலேயே நிறைய டிசைன்கள் இருப்பதால் இதுவும் வாக்காளர்களுக்கு அடையாளம் காண்பதில் சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தவெக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு சின்னம் கிடைத்துள்ளது. அந்த வகையில் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னமே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்ததும்தான் தாமதம்! தவெகவினர் நேற்று முதலே விசில் சின்னத்தை பிரபலப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விசில் அடித்து, பொதுமக்களுக்கு விசில் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
அது போல் கோட் படத்தில் வரும் விசில் போடு விசில் போடு என்ற பாடலையும் ஒலிக்க விடுகிறார்கள். அதன் வீடியோவையும் சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.
அது போல் தவெகவின் நிறமான மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் விசிலை தயார் செய்யவும் பல நிர்வாகிகள் ஆர்டர் கொடுத்துவிட்டனர். விஜய்யும் தனது சமூகவலைதள பக்கத்தில் நமது சின்னம் விசில், வெற்றியின் சின்னம் விசில், நல்லவர்கள் சின்னம் விசில், பாதுகாவலர்களின் சின்னம் விசில், ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விசில் சின்னத்திலேயே நிறைய டிசைனில் சின்னங்கள் இருப்பதால் தவெக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், பேனர்களிலும், சுவரொட்டிகளிலும் இவ்வளவு ஏன் மீம்ஸ்களிலும் கூட சரியான விசில் சின்னத்தை பயன்படுத்துங்கள். தேர்தல் ஆணையத்தால் நமக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைத்தான் பயன்படுத்துகிறீர்களா என்பதை தெரிந்து சோதனை செய்து கொள்ளுங்கள்.
அப்போதுதான் மக்கள் சரியாக அடையாளம் கண்டு கொள்வார்கள். இவ்வாறு குறிப்பிட்டு எது சரியான விசில், எது தவறான டிசைன் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அது போல் திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் விஜய்யின் விசில் சின்னத்தை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது விசில் சின்னமும் ரோடு ரோலர் சின்னமும் ஒரே மாதிரி இருப்பதால் தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பம் ஏற்படும். நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் என விமர்சித்து வருகிறார்கள். இதனால்தான் விஜய் இன்னும் விசில் சின்னம் குறித்த புகைப்படத்தை கூட போடலையோ!
விசில், ரோடு ரோலர் கூட ஓகேதான். ஆனால் ஒரே டிசைனில் விசில்களை தேர்தல் ஆணையம் சுயேச்சைகளுக்கு ஒதுக்கீடு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்கவே அவருடைய பெயர் அவரது இனிஷியல் கொண்ட 4 பேர் களமிறங்கப்பட்டனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications