இந்தியாவின் நம்பர் 1 கிராண்ட்மாஸ்டர் குகேஷ்.. தமிழகத்திற்கு பெருமை.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான குகேஷ், உலக சதுரங்க தரவரிசைப் பட்டியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த சாதனை இளம் திறமையாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான 17 வயதே நிறைந்த குகேஷ், உலக சதுரங்க தரவரிசைப் பட்டியலில் கடந்த இரண்டு தினங்களில் 4 இடங்கள் முன்னேறி, 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். FIDE உலகக் கோப்பை சதுரங்கப் போட்டிகள், அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு சுற்றுகளாக குகேஷ் வெற்றி பெற்று முன்னேற்றமடைந்து வருவதை அடுத்து, 2755.5 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகிலேயே பிடே ரேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடத்தில் உள்ள மிக குறைந்த வயதுடைய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ்.

உலக செஸ் வீரர் தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்திய தரவரிசையில் குகேஷ் முதலிடம் பிடித்தார். இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளார் குகேஷ். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற, இந்தியாவின் முன்னணி வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலகத் தரவரிசை பட்டியலில் 9 ஆவது இடத்தில் நீண்ட காலமாக இருந்தார். அவரை 10 ஆவது இடத்திற்கு தள்ளி, உலக அளவில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறிய குகேஷ், இந்திய தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த சாதனைக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். வாழ்த்துக்கள் கிராண்ட்மாஸ்டர்
டி. குகேஷ். முதல் முறையாக உலகின் முதல் 10 (FIDE) தரவரிசையில் நுழைந்த உங்கள் அசாத்திய சாதனையில் உங்களது உறுதியும் திறமையும் உங்களை செஸ் விளையாட்டின் உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளது. உங்கள் சாதனை, எல்லா இடங்களிலும் உள்ள இளம் திறமையாளர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணமாகவும் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications