ஆளும் கட்சி வரிசையில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் – விசிக.. சட்டசபையில் இருக்கைகள் ஒதுக்கீடு
சென்னை: தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளன. இதில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவின் எம்எல்ஏக்களுக்கு ஆளும் கட்சி வரிசையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளன.
தமிழகத்தில் ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதனால் தவெகவின் பலம் 107 எம்எல்ஏவாக (விஜய் ஒரு தொகுதியில் வென்றதை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அது சேர்க்கப்படவில்லை) உள்ளது.

இதனால் மெஜாரிட்டிக்கான 118 எனும் மேஜிக் நம்பரை பெற 12 எம்எல்ஏக்கள் குறைவாக இருந்தனர். பிற கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்டார். இதையடுத்து முதல் ஆளாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி சேர்ந்தது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிற்கு கிடைத்தது.
அதன்பிறகு தலா 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ளமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சிகள் கட்சிகள் வெளியில் இருந்து தவெகவை ஆதரிப்பதாக தெரிவித்தன. இதனால் விஜய்க்கு மெஜாரிட்டி கிடைத்தது. சட்டசபையில் விஜய்யின் பலம் 120 ஆக அதிகரித்தது. இது ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களை விட 2 அதிகமாகும். இதன்மூலம் விஜய் மெஜாரிட்டியை பெற்று நேற்று முன்தினம் முதல்வரானார்.
இதையடுத்து நேற்று அனைத்து எம்எல்ஏக்களும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் எம்எல்ஏவாக உறுதியேற்று கொண்டனர். இன்று சபாநாயகர், துணை சபாநாயகர் பொறுப்பேற்க உள்ளனர். சபாநாயகராக தவெகவின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம் துறையூர் தவெக எம்எல்ஏ ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இவர்கள் இன்று சபாநாயகர், துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கிடையே தான் சட்டசபையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆளும் கட்சி வரிசையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திமுக கூட்டணியில் வென்றாலும் கூட தற்போது விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இதனால் ஆளும் கட்சி வரிசையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக உள்பட பிற எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது











Click it and Unblock the Notifications