காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா?
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் பாமகவிலிருந்து விலகி அண்மையில் இணைந்த ஜி.கே.மணி மகன் தமிழ் குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு பாமக ராமதாஸ் அணியிலிருந்து விலகி கடந்த 28ஆம் தேதி காங்கிரஸில் இணைந்த தமிழ்க் குமரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த 7 நாட்களில் சீட் பெற்றுள்ளார் தமிழ்க் குமரன். இவர் யார் என்ற பின்னணியை பார்க்கலாம்.
ஜிகேஎம் தமிழ்க்குமரன் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2', 'வேட்டையன்' போன்ற பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு வெளியான 'என்றென்றும் புன்னகை' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாமக-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான 'மக்கள் தொலைக்காட்சி' குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.
2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவாக வென்ற திமுகவின் பெரியண்ணன் காலமானார். இதனால் இந்தத் தொகுதிக்கு 2010 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பாமக சார்பில் ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், 'நலம் காக்கும் அணி' சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 788 வாக்குகள் பெற்று, தனது எதிரணியைச் சேர்ந்த தேனாண்டாள் முரளியை (241 வாக்குகள்) தோற்கடித்தார். இது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு வேட்பாளர் பெற்ற மிக அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் , அன்புமணி வகித்து வந்த பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு தமிழ்க் குமரன் நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட 3 மாதத்தில், அதாவது டிசம்பர் மாதத்தில், அந்த பதவியில் இருந்து விலகினார் தமிழ்க்குமரன்.
இதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு பாமக நிறுவனர் ராமதாஸின் பேரனும் மகள் காந்திமதியின் மகனுமான முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். இதற்கு அந்த மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து மைக்கை தூக்கி அடித்தார். இந்த சம்பவத்தின் போது முதல் அப்பா- மகனுக்கு இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து தன்னால் தாத்தாவுக்கும் மாமாவுக்கும் சண்டை ஏற்படக் கூடாது என்பதற்காக முகுந்தனும் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து பாமக தலைவர் பதவியை அன்புமணியிடம் இருந்து பறித்த ராமதாஸ், அவரை செயல்தலைவராக நியமித்தார். ஆனால் இந்த பதவியை ஏற்க அன்புமணி மறுத்தார்.
இதையடுத்து அன்புமணிக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டு அவர் அந்த பதவியில் ஏற்காத நிலையில் தனது மகள் காந்திமதியை செயல்தலைவராக நியமித்தார். அப்போது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜி.கே.மணி மகன் தமிழ்க் குமரனை பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு நியமித்தார்.
இவ்வாறு நியமித்து 4 மாதங்கள்தான் ஆனது ஆனால் அதற்குள், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்க்குமரன் தாவிவிட்டார். ஏற்கெனவே ஒரு முறை ராமதாஸிடம் இருந்து 3 மாதங்களிலேயே விலகிய நிலையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்ட தமிழ்க்குமரன் 2ஆவது முறையாக ராமதாஸை ஏமாற்றிவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அன்புமணி பாமகவை சேர்ந்த பாடி வி.செல்வமும் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாமக மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார் செல்வம். ஒருங்கிணைந்த பாமக இருந்த போது தமிழ்க் குமரனின் தந்தை ஜி.கே.மணி போட்டியிட்டு சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறார். வடதமிழக பகுதியான பென்னாகரம் தொகுதியில் வன்னியர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவின் அஇபுதமமுகவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதுவரை பென்னாகரத்திற்கு ராமதாஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. ஒரு வேளை ஜி.கே.மணியை நிறுத்தினால் தந்தையுடனேயே மகன் போட்டியிடும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
-
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications