Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனாலும் விஜய் இப்படி பண்ணி இருக்க கூடாது.. ஆழம் பார்த்த ராகுல் காந்தி.. கடுப்பாகிட்டாராமே.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் மௌனமாக இருப்பது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கடுப்பாக்கி உள்ளதாம். அவருக்கு ஆதரவாக நாம் போஸ்ட் செய்தோம்.. ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று விஜய் மீது ராகுல் காந்தி கடுப்பில் உள்ளாராம்.

காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தவெக விஜய் தரப்பிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. திரையுலகமே பெரிதாக விஜயை ஆதரிக்காத நிலையில்.. காங்கிரஸ் இதில் விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

congress

விஜய் காங்கிரஸ்

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

காங்கிரஸ் விஜய் ஆதரவு

மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளது.

முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக கருத்து சொல்லி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி செய்துள்ள போஸ்டில், ஜனநாயகன் திரைப்படத்தை தடுப்பதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றிப்பெற மாட்டீர்கள், என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

கடுப்பான ராகுல் காந்தி

ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் மௌனமாக இருப்பது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கடுப்பாக்கி உள்ளதாம். அவருக்கு ஆதரவாக நாம் போஸ்ட் செய்தோம்.. ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று விஜய் மீது ராகுல் காந்தி கடுப்பில் உள்ளாராம். அவருடைய படத்திற்காக நாம் பேசுகிறோம். ஆனால் அவர் பேசவில்லை. அதைவிட மோசமானது.. அவருக்காக பேசிய நம்மை விஜய் மதிக்க கூட இல்லை என்று ராகுல் காந்தி கோபத்தில் இருக்கிறாராம்

இதையடுத்தே 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர்-அரசியல்வாதியான விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) எந்தவித தேர்தல் கூட்டணியும் இல்லை என காங்கிரஸ் தலைமை ஒரு திட்டவட்டமான முடிவை உறுதியாக எடுத்துள்ளதாக கூறப்டுகிறது. மாறாக, திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிப்பதாக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

விஜயின் தவெக பற்றிய பேச்சு வந்த போது.. ராகுல் காந்தி அந்த உரையாடலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள கட்சி தேசியத் தலைமை அலுவலகமான இந்திரா பவனில், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த நான்கரை மணி நேர முக்கிய உத்திக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முடிவு எடுத்துள்ளதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் பதற்றம் ஏற்பட்டால் காங்கிரஸ் மாற்று வழிகளை நாடக்கூடும் என்ற அண்மைய பேச்சுக்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது. காங்கிரஸ் தலைமை திமுகவுடனான கூட்டணியே தங்கள் விருப்பமான அரசியல் பாதை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

விஜய் பற்றிய பேச்சு வந்த போது.. ராகுல் காந்தி அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. விஜயுடன் கூட்டணி வேண்டுமென்றால் இயல்பாக இருக்கலாம்.. ஆனால் அது வெற்றி கூட்டணியாக இருக்க வாய்ப்புகள் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாக தெரிகிறது.

அதே சமயம் திமுக ஆட்சியில் அமைச்சர் பதவிகள் கோரும் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு தெளிவான மற்றும் நிதானமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2026 தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறினால் மட்டுமே அமைச்சர் பதவிகளைக் கோரும். இல்லையெனில், அதிகாரப் பகிர்வை வலியுறுத்தாமல் திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+