காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
டெல்லி: அசாம் சட்டசபை தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ் கட்சி. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் சார்பில் 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அடுத்த சில நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் கூட்டணி கட்சியினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுகவோடு தொகுதி உடன்பாட்டை முடித்துள்ளது. திமுக கூட்டணியில் 28 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தமிழகத்தில் சீட் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது காங்கிரஸ். வேட்பாளரை தேர்வு செய்யும் வேலைகளில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில், முதற்கட்டமாக 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அண்மையில் வெளியிட்டது. வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய தினம் வரை காங்கிரஸ் தலைமை வேட்பாளர் அறிவிப்பை தள்ளிப்போட்ட காலம் மாறி, தற்போது அசாமில் தேர்தலுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியல் வெளியானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, 42 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்காத் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் தேபப்பிரதா சைகியா நஜிரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிபுன் போரா பார்சல்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், ஸ்ரீங்ராம் தொகுதியில் நூருல் இஸ்லாம், மண்டியாவிலிருந்து அப்துல் கலீக், சாமாரியாவிலிருந்து ரகிபுதீன் அகமது, தின்சுகியாவிலிருந்து தேவித் புகான் மற்றும் திங்க்கோங்கிலிருந்து பிபுல் கோகோய் ஆகியோர் போட்டியிடுவார்கள்.
கூட்டணிக் கட்சிகளுக்கு 15 இடங்களை விட்டுத் தந்துள்ளது காங்கிரஸ் கட்சி. 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 2016 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications