மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் காஞ்சிபுரம் எம்பியாக விஸ்வநாதன் இருந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. திங்கட்கிழமை தான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். மேலும் தேர்தலுக்கும் இன்னும் 3 வாரங்கள் கூட இல்லை என்பதால், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
தேர்தலுக்கு நாட்கள் குறைவாகவே இருப்பதால் திமுக, அதிமுக பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சிகள் ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
ஆனால் மேலூர் சட்டசபை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்படிமுன்னாள் எம்பியான விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே இவர் காஞ்சிபுரம் தொகுதியில் எம்பியாக இருந்தவர் ஆவார்.
28 தொகுதிகளில் யார் யார் போட்டி?
1. பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர்
2. வேளச்சேரி - அசன் மவுலானா
3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - செல்வப்பெருந்தகை
4. சோளிங்கர் - ஏ.எம். முனிரத்தினம்
5. ஊத்தங்கரை (தனி) - ஆர். குப்புசாமி
6. கிருஷ்ணகிரி - டாக்டர் செல்லக்குமார்
7. பென்னாகரம் - ஜி.கே.எம். தமிழ்குமரன்
8. ஆத்தூர் (தனி) - எஸ்.கே. அர்த்தநாரி
9. ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
10. ஊட்டி - எஸ். ராமச்சந்திரன்
11. கவுண்டம்பாளையம் - கே.பி. சூர்ய பிரகாஷ்
12. சிங்காநல்லூர் - வி. ஸ்ரீநிதி நாயுடு
13. துறையூர் (தனி) - விச்சு லெனின் பிரசாத்
14. கடலூர் - ஏ.எஸ். சந்திரசேகரன்
15. மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனூஸ்
16. அறந்தாங்கி - டி. ராமச்சந்திரன்
17. காரைக்குடி - எஸ். மாங்குடி
18. உசிலம்பட்டி - டி. சரவணகுமார்
19. சிவகாசி - கணேசன் அசோகன்
20. திருவாடனை - ராம கருமாணிக்கம்
21. ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்
22. சங்கரன்கோவில் (தனி) - சங்கை கணேசன்
23. அம்பாசமுத்திரம் - வி.பி. துரை
24. நாங்குநேரி - ரூபி மனோகரன்
25. குளச்சல் - தாரகை கத்பட்
26. விளவங்கோடு - டி.டி. பிரவீன்
27. கிள்ளியூர் - எஸ். ராஜேஷ்குமார்
28. மேலூர் - விஸ்வநாதன்
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications