காமராஜர், அபுல் கலாம் ஆசாத் படங்கள் எங்கே? விளம்பரத்தில் புறக்கணித்த காங்கிரஸ் - வலுக்கும் கண்டனம்
காமராஜர், அபுல் கலாம் ஆசாத் படம் இடம்பெறாததற்கு இந்திய தேசிய மாணவர் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியில் 85 வது அகில இந்திய மாநாட்டுக்கான விளம்பரத்தில் இடம்பெற்ற அக்கட்சிக்காக பாடுபட்ட தேசிய தலைவர்களின் படங்களின் வரிசையில் இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆகியோரது படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினரே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 வது அகில இந்திய மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ரவா ராய்பூரில் நடைபெற்றது. 24 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

காங்கிரஸ் விளம்பரம்
இந்த மாநாட்டில் இந்திய முழுவதும் இருந்து 15,000 காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். மாநாட்டுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டது. அதே விளம்பரமாக சுவரொட்டியும் ஒட்டப்பட்டது. இந்த விளம்பர படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தலைவர்கள் படம்
அந்த விளம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் படங்கள் மேலே இடம்பெற்று இருந்தன. அதில், தேசத் தந்தை மகாத்மா காந்தி, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், அண்ணல் அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பிவி நரசிம்மராவ் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இருந்தன.

மௌலானா அபுல் கலாம் ஆசாத்
விளம்பரத்தின் அடிப்பாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால், தலைவர்களின் படங்கள் இருந்த வரிசையில் இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் இந்தியாவின் முதல் கல்வியமைச்சரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் புகைப்படம் இடம்பெறவில்லை.

காமராஜர் படம்
அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கர்ம வீரர் காமராஜரின் புகைப்படமும் அதில் இல்லை. இதுதான் காங்கிரஸ் கட்சியினரிடமே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைமை இஸ்லாமிய சமூகத்தையும், தமிழ்நாட்டையும் புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

தேசிய ஆளுமை காமராஜர்
குறிப்பாக காமராஜர் படத்தை காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்க்காததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அவர் முதலமைச்சராக இருந்தபோது ஆற்றிய கல்வி சேவைகளை கடந்து தேசிய அரசியலிலும் மகத்தான தலைவராக அறியப்பட்டார். இந்தியாவின் 2 பிரதமர்களை உருவாக்கியவர் என்று போற்றப்படுபவர்.

முதல் கல்வியமைச்சர் அபுல் கலாம்
அதேபோல், தேச விடுதலைக்காக காங்கிரஸின் தலைவராக இருந்த பாடுபட்டவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக பதவியேற்று நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத். இவரது பிறந்தநாளான நவம்பர் 11 ஆம் தேதிதான் தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

கல்விக்காக உழைத்த தலைவர்கள்
இப்படி தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் கல்விக்காக பெரும் பங்காற்றிய 2 பெரும் ஆளுமைகளை காங்கிரஸ் தலைமை விளம்பரத்தில் குறிப்பிடாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு படி தாண்டி காங்கிரஸ் கட்சியினரே வெளிப்படையாக தலைமைக்கு கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளார்கள்.

மாணவர் சங்க மாநில தலைவர்
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கமான NSUI இன் தமிழ்நாடு மாநில தலைவர் அப்துல் சலாமும் 2 தலைவர்களின் படங்களை தவிர்த்ததற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், "அபுல்கலாம் ஆசாத் மற்றும் கர்மவீரர் காமராஜர் படம் தவிர்த்த அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு வன்மையான கண்டனங்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications