மகத்தான வெற்றிபெறுவார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. அதிமுக சஞ்சலத்தில் இருக்கிறது.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக கூட்டணி சஞ்சலத்தில் உள்ளதாக கூறிய அவர், தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

காங்கிரஸ் முன்னிலை
காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,124 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார். இவருக்கு பின் அதிமுக வேட்பாளர் 2,868 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட தன்னுடன் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விடவும் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருப்பது திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதி 2 ஆண்டுகளுக்குள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்தோம்.

சஞ்சலத்தில் அதிமுக
எங்களை எதிர்த்து நின்ற அதிமுக, சஞ்சலத்தில் இருக்கிறார்கள். சஞ்சலத்தில் உள்ள, தன்னம்பிக்கையில்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். எங்களின் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார்.

3வது அணி
தொடர்ந்து மூன்றாவது அணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, இதுவொரு பொதுவான கருத்து. காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரைசேராது என்று முதல்வர் சொல்லிய வார்த்தைகள் முத்தான வார்த்தைகள். அதேபோல் மு.க.ஸ்டாலின் ஒரு அரைகூவலை விடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications