நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி!
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரிய கேள்வியாக மாறியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகள் பலவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், காங்கிரஸ் மட்டும் இன்னும் பட்டியல் வெளியிடாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளையும், வேட்பாளர் பட்டியல்களையும் வெளியிட்டு தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்.டி.ஏ அணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுடன், அதிமுக தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் பணிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு
இதனால் மற்ற கட்சிகளும் தங்களது வேட்பாளர் தேர்வு பணிகளை விரைவுபடுத்தியுள்ளன. மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதையும் கூட்டணி தலைமை கடந்த மார்ச் 28ஆம் தேதியே அறிவித்துவிட்டது.
காங்கிரஸ் தொகுதிகள்
காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
- ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி!
- கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்?
- முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!
- ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
ஆனால், இன்று வரை காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகவில்லை. இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட காரணம், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் என கூறுகின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்க்ள். குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற மத்திய தேர்வுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலை பார்த்த ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி
சில தொகுதிகளில் பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக புகார்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது அனுமதி இல்லாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிடக்கூடாது என்று ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கல்
இதனால் மீண்டும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 31, ஏப்ரல் 1, 3 மற்றும் 5 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கலுக்கான நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றது. வரும் ஏப்ரல் 2, 4 மற்றும் 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி
இதேபோல், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, இன்றிரவு தில்லி திரும்பியதும் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று அல்லது நாளை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
டெல்லியை துறந்து டார்கெட் 2026! திருமாவளவன் திடீர் முடிவின் பின்னணியில் இருக்கும் பலமான ஸ்கெட்ச் இதுதானா? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி













Click it and Unblock the Notifications