27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு!
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த முறை 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லியில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், இப்போது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுகிறார். மேலூர் தவிர 27 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன. காங்கிரஸ் மற்றும் பாஜக எனத் தேசிய கட்சிகள் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ்
இதில் காங்கிரஸை பொறுத்தவரை இந்த முறையும் திமுக கூட்டணியிலேயே போட்டியிடுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சி கடந்த 2021ல் போட்டியிட்ட 25 தொகுதிகளை விட 3 தொகுதிகள் அதிகமாகும்.
28 தொகுதிகள்
அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சில காரணங்களால் வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவி வருகிறது. நேற்றிரவே கூட வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் கூட நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் வரை இந்த கூட்டம் நடந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலூர் நிறுத்திவைப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஹசன் மௌலானா, சோளிங்கர்யில் முனிரத்னம் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வேட்பாளர் பட்டியல்
- பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்
- வேளச்சேரி- அசன் மௌலானா
- ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை
- சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்
- ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி
- கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்
- பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்
- ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி
- ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்
- உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்
- கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்
- சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு
- துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்
- கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்
- மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது
- அறந்தாங்கி- டி.ராம சந்திரன்
- காரைக்குடி- எஸ்.மாங்குடி
- உசிலம்பட்டி- டி.சரவண குமார்
- சிவகாசி- கணேசன் அசோகன்
- திருவாடானை- ராம கருமாணிக்கம்
- ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்
- சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்
- அம்பாசமுத்திரம்- வி.பி. துரை
- நாங்குநேரி- ரூபி மனோகரன்
- குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்
- விளவங்கோடு- டி.டி.பிரவீன்
- கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

வேட்புமனு
தமிழகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. நாளை மற்றும் திங்கள் என வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இரு நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம் -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications