காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கும் திமுக.. உறுதி செய்த செல்வப்பெருந்தகை!
சென்னை: திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் ஓரிரு நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார் செல்வப்பெருந்தகை.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான இத்தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அப்படி சொல்லவும் இல்லை. ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிடுகின்றன.
திமுக தலைமையில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இதைச் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது, ஒழிக்க முடியாது. இதை முயற்சிக்கும் சக்திகள் தோல்வியடையும். எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கிறது. எங்களுடைய அகில இந்தியத் தலைமை இதில் தலையிட்டிருக்கிறார்கள். அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு, தமிழ்நாட்டு அதிகாரத்தைத் டெல்லியில் அடகு வைப்பதற்கு அதிமுகவை ஒரு முகமூடி போட்ட பாஜக முயற்சிக்கிறது. அதிமுகவும் பாஜகவும் இங்கே கால் ஊன்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போமா? எங்களுடைய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக எப்போது சொன்னார்? அப்படி அவர் சொல்லவே இல்லை.
நாங்கள் திமுக தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார் கிரிஷ் சோடங்கர். இன்னும் ஒரு படி மேலே போய் விஜய்யின் தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கிரிஷ் சோடங்கர் கூறி இருக்கிறார். இதைத் திரித்துத் திரித்து ஒரு சில தொலைக்காட்சிகள் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுத் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்களுடைய அகில இந்தியப் பொதுச்செயலாளர் வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். மறுநாள் நானும் கிரிஷ் சோடங்கரும் கனிமொழியை சந்தித்தோம். எங்களுடைய உறவு என்பது ஆழமான உறவு, மிகவும் வலிமையான உறவு, ஐடியலாஜிக்கல் அலையன்ஸ். இது தொடர் வெற்றி கூட்டணி. இதைச் சிதைப்பதற்கும் திசை திருப்புவதற்கும் சில சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மதவாத சக்திகள், பாசிச சக்திகள் தமிழ்நாட்டை அபகரிக்க, தமிழ்நாட்டில் கால் ஊன்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்க்கப் போராடுவோமா? அது உள்ளே வருவதற்கு அனுமதிப்போமா? நான் கூட காலையில் கிரிஷ் சோடங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். இது மாதிரி ஒரு சில செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது என சொன்னேன். அவர் இதை மறுக்கிறார். நான் அப்படி எங்கேயுமே சொல்லவில்லை என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கும். இந்த கூட்டணி வலிமையாகத் தொடரும். இன்னும் சொல்லப்போனால் மாநிலங்களவை தேர்தலில் இன்னும் ஓரிரு நாளில் எங்களுடைய வேட்பாளர், வேட்புமனுத் தாக்கல் செய்வார். இந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது எங்கள் கூட்டணி." எனத் தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சீட் எண்ணிக்கை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 27 சட்டசபை தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் தர திமுக உறுதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலயில் தான், காங்கிரஸ் கட்சிக்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டிருப்பதை செல்வப்பெருந்தகை உறுதி செய்திருக்கிறார்.
-
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா












Click it and Unblock the Notifications