லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடும் 10 காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. கடந்த மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தமிழ்நாட்டில் துவங்கியது. வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. வரும் 30ஆம் தேதி இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது.

Congress Candidates List for Lok Sabha Elections 2024

திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான வேட்பாளர் பட்டியலை பல்வேறு கட்டங்களாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:

1. திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்

2. கரூர் - ஜோதிமணி

3. விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

4. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

5. கன்னியாகுமரி - விஜய் வசந்த்

6. கடலூர் - விஷ்ணு பிரசாந்த்

7. கிருஷ்ணகிரி - கோபிநாத்

8. நெல்லை - ராபர்ட் புரூஸ்

9. மயிலாடுதுறை - சுதா

10. புதுச்சேரி - வைத்தியலிங்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+