2029 லோக்சபா தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி கிடையாது.. இனி தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை: தவெக ஆட்சி அமைக்க மட்டுமல்லாமல், உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் மற்றும் ராஜ்ய சபா தேர்தலிலும் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 10 ஆண்டு கால திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்து கொண்டுள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும் என்று அறிவித்திருப்பதன் மூலமாக, 2029 லோக்சபா தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவு வெறும் சட்டமன்றத்தோடு நின்றுவிடாமல், எதிர்காலத் தேர்தல்களிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் நிலையான ஆட்சியை வழங்க தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக-வுடன் இணைந்து களம் காண காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. 2029 லோக்சபா தேர்தலில் தவெக-வுடன் கூட்டணி அமைப்பதோடு, ராஜ்ய சபா தேர்தல்களிலும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தற்போது தவெக பக்கம் சாய்ந்திருக்கிறது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, 2026 தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சந்தித்த வாக்குச் சரிவும், இளைஞர்களிடையே விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்ட ஆதரவும் காங்கிரஸை இந்த முடிவை நோக்கித் தள்ளியுள்ளன. தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதிலும், தமிழகத்தில் புதிய ரத்தத்தைப் பாய்ச்சுவதிலும் இந்தத் தவெக-காங்கிரஸ் கூட்டணி ஒரு முன்னோடியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலமாக திமுக - காங்கிரஸ் இடையிலான 10 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. 2029 லோக்சபா தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதால், திமுகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஸ்டாலினுடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் ஏற தவிர்த்திருந்தார். இதனால் தவெக கூட்டணியை ராகுல் காந்தி விரும்பியதும் தெரிய வந்துள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்?












Click it and Unblock the Notifications