இந்த பழம் புளிக்கும்.. காங்க்., - திமுக கூட்டணியில் புகைச்சல்? விஜய் வீசிய வலையில் விழுந்த விஐபிகள்?
சென்னை: கடந்த சில தினங்களாகவே காங்கிரஸ் திமுக கூட்டணி தொடருமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பார்வையாளர்களிடம் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் என சிலர் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் தோல்வியை தொடர்ந்து காங்கிரசுக்கு தொகுதிகளை குறைத்துக் கொடுக்க வேண்டும் என்ற பேச்சு திமுக தலைவர்களிடையே எழுந்திருக்கும் நிலையில் அதிருப்தியில் உள்ளனர் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள்.
தமிழக அரசியலில் இப்போது மிக அதிகமாக பேசப்படும் விஷயம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா? இல்லையா? என்ற கேள்வி தான். காங்கிரஸுக்கு தமிழகத்தில் வாக்கு வலிமை குறைந்துவிட்டது என்று பலரும் பேசிக்கொண்டிருகின்றனர்.
ஆனால், திமுக தலைமையோ காங்கிரஸை இன்னும் தேவையான கூட்டாளியாகவே பார்க்கிறது. குறிப்பாக 2026 தேர்தலை முன்னிட்டு, கை கூட்டணியில் இருக்கும் என உறுதியாகச் சொல்லியுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், காங்கிரஸில் இன்னும் சில 'தலைகள்' அதிருப்தியில் தான் உள்ளார்களாம்..

காங்கிரஸ் கூட்டணி
இந்த விவாதத்தை தீவிரப்படுத்த முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. அவர் சாதாரணமாக அரசியலுக்கு வரவில்லை; ஆட்சியில் பங்கு தருவோம் என்று நேரடியாக அழைப்பை விடுத்து விட்டார். அவர் சென்ற இடமெல்லாம் வரும் கூட்டம் காங்கிரசில் சிலருக்கு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. "அந்தப்பக்கம் போனால் நல்லா இருக்குமோ?" என்று சத்யமூர்த்தி பவனுக்குள்ளே இருந்தே சில பேச ஆரம்பித்தார்கள்.
விஜய் அரசியல்
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு ராகுல் காந்தி விஜய்யை நேரடியாக அழைத்துப் பேசியதாக வந்த தகவல், காங்கிரஸின் இளம் எம்.பி.களிடம் இன்னும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அவர்களுக்கு உள்ளுக்குள் புதிய அரசியல் சமிக்ஞைகள் தெரிந்ததுபோலிருந்தது. 1996-ல் மூப்பனார் அதிமுக கூட்டணி வேண்டாம் என்றாலும், காங்கிரஸ் அதிமுகவுடன் சென்றது. அதை எதிர்த்து மூப்பனார் தமாகாவை உருவாக்கினார். ரஜினிகாந்தின் ஆதரவால் அந்த கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது.
தமிழக காங்கிரஸ்
இன்று விஜய்யை நோக்கி மெல்ல நகரும் காங்கிரஸ் தொண்டர்களை பார்த்தபோது, அந்த காலக்கட்டம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. இந்த அனுபவங்களையெல்லாம் நினைவுபடுத்தும் விதமாக சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள், திமுக எப்போதும் கூட்டணியில் காங்கிரஸின் இடத்தை படிப்படியாகக் குறைத்ததே தவிர உயர்த்தியதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். 1980-ல் 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இன்று 9 தொகுதிகளுக்குள் தள்ளப்பட்டுவிட்டது.
கரூர் எம்.பி. ஜோதிமணி
2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் 63 சீட்டுகள் பெற்ற கட்சி, கடந்த முறை 25-க்கு தள்ளப்பட்டது. உள்ளாட்சியிலும் காங்கிரஸ் நிலை மிக மோசம் என்பதே இவர்களின் குற்றச்சாட்டு, காங்கிரஸ் உள்ளே விஜய் கூட்டணிக்கு அழைக்க சில விஐபிகள் தயராக உள்ளனர். கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு செந்தில்பாலாஜி பிரச்சினையால் திமுகவுடன் உரசல் ஏற்பட்டது, மாணிக்கம் தாகூரும் கடந்த முறை திமுக உள்ளடி வேலைகளால் சிக்கலில் சிக்கினார். இவர்களுக்கு விஜய் பக்கம் செல்லும் ஆர்வம் அதிகம்.
கார்த்தி சிதம்பரம்
ஆனால் கார்த்தி சிதம்பரம் போன்றோர் திமுகவின் ஆதரவை இழக்கக் கூடாது என்பதால் மிக கவனமாக நடந்து கொள்கிறார்கள். செல்வப்பெருந்தகை போன்ற தலைவர்களுக்கு திமுக உறவு அவசியம். ஆனால் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் விஜய் பக்கம் சென்றால் தனது தொகுதிக்கே ஆதாயம் என நினைக்கிறார். அதே நேரத்தில், கேரளத்தில் முதல்வர் ஆசையுடன் இருக்கும் கே.சி. வேணுகோபால், விஜய் போன்றவர் சேர்ந்தால் கேரளத்தில் காங்கிரஸுக்கு உதவும் என கூறுகின்றனர். டெல்லியில் உள்ள தலைவர்களும், யார் இந்த விஜய்? என்று விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.
திமுக கூட்டணி
இந்த சூழ்நிலையில், திடீரென காங்கிரஸ் இன்னொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களாக இருந்த சூரஜ் ஹெக்டே, கிரீஷ் சோடங்கர் ஆகியோருடன் சேர்த்து, சினிமா துறைக்கு நன்கு தெரிந்த நிவேதித் ஆல்வாவையும் கூடுதல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. விஜயுடன் பழக்கம் உள்ளவர் என்ற காரணம் அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்படுகிறது. திமுக கூட்டணி தவறினால் பனையூருக்கு செல்லும் பாதை தயாராக வைத்துக்கொள்கிறார்களா? என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
-
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்!












Click it and Unblock the Notifications