1996 ரிட்டர்ன்ஸ்.. இரண்டாக உடையும் காங்கிரஸ்? விஜய் பக்கம் போனா சிக்கல் தான்! டெல்லிக்கு வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது என்றே சொல்லலாம். திமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என முன்னணித் தலைவர்களும், விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என இரண்டாம் கட்ட தலைவர்களும் காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். விஜய் பக்கம் செல்லலாம் என டெல்லி தலைமை முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படும் நிலையில், கட்சி இரண்டாக பிளவுபடும் சூழல் இருப்பதாக எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதிக சீட்டுகள், துணை முதலமைச்சர் பதவி, அமைச்சர் பதவிகள் என தவெக ஆஃபர்கள் காங்கிரஸுக்கு அள்ளி வீசி வருகிறது. அதே நேரத்தில் பீகாரில் ஏற்பட்ட தோல்வியால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகளை மட்டுமே ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனால், 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்த அடுத்த திட்டம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமென்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம்.

Congress Vijay TVK

காங்கிரஸ் குழப்பம்

ஆனால், திமுகவின் கூட்டணி கணக்குகள் டெல்லி மேலிடத்தின் கணக்குகளுடன் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தால், அக்கட்சியில் நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனல், காங்கிரஸ்-திமுக கூட்டணியா? அல்லது தவெகவுடன் புதிய கூட்டணியா? என்ற விவாதம் கட்சிக்குள் தீவிரமாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், திமுக அதிக இடங்களை ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், திமுகவில் இவை சாத்தியமில்லை என்பதால், சிலர் நேரடியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என டெல்லி தலைமையிடம் பரிந்துரை செய்தனர்.

விஜய் தவெக கூட்டணி

இதனால், காங்கிரஸ் தவெக பக்கம் செல்லக்கூடும் என எதிர்பார்ப்பும் உருவானது. இந்நிலையில், இந்த குழப்பத்தைத் தீர்க்க காங்கிரஸ் டெல்லி தலைமை, 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை கடந்த வாரம் அமைத்தது. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை தலைவர் செ. ராஜேஷ்குமார், தேசிய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே மற்றும் நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் இதில் உள்ளனர். இக்குழு முதற்கட்டமாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியியல் பேச்சுவார்த்தை நடத்தியது.

பிரவீன் விஜய் சந்திப்பு

இந்நிலையில், திடீரென காங்கிரஸ் தரப்பு தலைவரும் தரவு பகுப்பாய்வு நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்தது பெரிய செய்தியானது. ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் எனக் கருதப்படுவதால், இந்த சந்திப்பு ராகுலின் விருப்பத்தோடு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்தது. காங்கிரஸின் ஒரு தரப்பு, இது ராகுலின் விருப்பத்தின்படியே நடந்த சந்திப்பு எனக் கூற, மற்றொரு தரப்பு இது தனிப்பட்ட சந்திப்பு என மறுத்தது. ஆனால், பிரவீன் விஜயைச் சந்தித்ததை திமுக விரும்பவில்லை எனவே சொல்லப்படுகிறது. ஏற்கனவே திமுக தொடர்பான ஒரு ஆடியோ விவகாரத்தில் பிரவீனின் பெயர் அடிபட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு

மேலும் 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிடவேண்டும் என்ற அவரது விருப்பத்தை திமுக எதிர்த்ததாலுன், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தராததாலும், திமுக கூட்டணியை பாதிக்கும் வகையில் பிரவீன் செயல்படுகிறார் என்ற சந்தேகமும் திமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆனால், பெரும்பாலான தமிழக காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக தற்போதைய எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் அனைவரும் திமுக கூட்டணியையே தொடர விரும்புகிறார்கள். தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் கட்சிக்குள் மிகச் சிலரால் மட்டுமே முன்வைக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தி பவன் பிரச்சனை

ஒருவேளை, தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை புறக்கணித்து ராகுல் காந்தி விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவெடுத்தால், 1996 சட்டமன்றத் தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சியின் பெரிய பிளவு ஏற்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது ஏற்பட்ட பிளவைப் போலவே, சத்தியமூர்த்தி பவன் கூட காங்கிரஸ் கைக்கு எட்டாத நிலை உருவாகலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை யாரை தேர்வு செய்ய போகிறது? என்பதே கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+