'இப்படியொரு அசிங்கமான காரியம்'.. ஜான் பாண்டியன் பேட்டியால் பெரிய சிக்கலில் காங்கிரஸ் நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது; வீரமணியிடம் பணம் பெற்றுத் தருமாறு சாந்தியும், ரஞ்சனும் அணுகினர்; நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். தமிழக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாக அதனை மறுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ரஞ்சன் குமார் சொல்வது வேறாகவும், ஜான் பாண்டியன் சொல்வது வேறாகவும் உள்ளது. இதில் ஜான் பாண்டியன் ஒருபடி மேலே சென்று, ரஞ்சன் குமாரும் சாந்தியும் தான் பணம் பெற்றுத் தருமாறு அணுகியதாகத் தெரிவித்திருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் காங்கிரஸ் மாநில நிர்வாகி ரஞ்சன் குமார் மீது புகார் எழுந்துள்ளது. வீடியோவை வைத்துச் சாந்தியுடன் சேர்ந்து ரஞ்சன் குமார் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ரஞ்சன் குமார், அளித்த பேட்டியில், "கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி அன்று, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த காவல் அதிகாரியைச் சந்தித்து, வீரமணி, சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழுத்துப்பூர்வமாகப் புகார் தந்துள்ளேன்.

Congress functionary Ranjan Kumar in deep trouble following John Pandian s interview

அத்துடன் வீரமணி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் இணைத்திருந்தேன். வீரமணி மற்றும் சாந்தி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டே புகார் அளித்திருந்தேன். இது தொடர்பாக விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமிகளைத் தெரியுமா என்று காவல்துறையினர் கேட்டனர். எனக்குத் தெரியாது என்றேன். சாந்தியைக் கைது செய்து விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியே வரும் எனத் தெரிவித்தேன். 2 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் புகாரைக் கிடப்பிலேயே போட்டனர். எனது புகாரை அவர்கள் எடுக்கவில்லை, 2024-லேயே புகார் அளித்தும் 2025-இல் தான் புகார் வந்தது என்கிறார்கள். இது எப்படி எனத் தெரியவில்லை.

சில உள்நோக்கம் கொண்டவர்கள் என்னை இச்சம்பவத்துடன் தொடர்புபடுத்த முயல்வதாலும், காவலத்துறை எனது பங்கை அங்கீகரிக்காததாலும், மேலும் கடந்த ஆண்டுதான் புகார் கிடைத்ததாகக் கூறி வழக்கை ஓராண்டு காலம் தள்ளிப்போட முயல்வதாலும், இந்தத் தகவல்களை நான் இப்போது சொல்கிறேன்.

மேலும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளைத் தனது பாலியல் இச்சைக்கு இரையாக்கினார். அச்சிறுமிகள் மீது அவர் பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் புகாரையே நான் அளித்திருந்தேன். இந்தப் பிரச்சினையில் என் மீது அவதூறு பரப்பப்படுவது கண்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யக் காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.

இதனிடையே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று தமிழக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "இந்த விவகாரத்தில் கூறப்படும் சாந்தியை எனக்கு யார் என்றே தெரியாது. எனக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு மாநிலத் தலைவராக இருக்கும் ரஞ்சன் குமார் மட்டுமே எனக்கு அறிமுகமானவர்.

இந்த விவகாரத்தில் ரஞ்சன் குமார்தான் என்னைத் தேடி வந்தார். ஜெம் வீரமணியை மிரட்டி, அவரிடமிருந்து பெரிய தொகையைப் பணம் பறித்துக் கொடுக்குமாறு ரஞ்சன் குமார்தான் என்னை அணுகிப் பேசினார். இதற்காகவே சாந்தி திட்டமிட்டு வீடியோக்களை எடுத்து, அதனை ஒரு மிரட்டல் ஆயுதமாகப் பயன்படுத்தினார். தொழிலதிபர் வீரமணியை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமே அவர்களின் திட்டமாக இருந்தது.

இந்தச் சட்டவிரோதச் செயல்களில் தமக்கு எப்போதுமே உடன்பாடில்லை. இப்படியொரு அசிங்கமான மற்றும் தவறான காரியத்தில் தலையிட என் மனம் சம்மதிக்கவில்லை. இதனால் ரஞ்சன் குமாரின் கோரிக்கையை முற்றிலுமாக மறுத்துவிட்டு, நான் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க, இந்த வழக்கில் நான் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றதாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது" இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் கூறுவதற்கும், ஜான் பாண்டியன் கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உண்மையில் வீரமணி 70 கோடிக்குச் சொத்துக்களை விற்றிருப்பதும், அந்தப் பணத்தைப் பலர் பங்கு போட்டிருப்பதும் உண்மை என்றும் இதில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுவது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தோண்ட தோண்ட பூதம் வெளிவந்த கதையாக வந்து கொண்டே இருக்கிறது. ஜான் பாண்டியனின் பேட்டியைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+