பாஜக பின்னிய சதி வலையில் காங்கிரஸ் சிக்கியது... இப்போது சும்மா விட மாட்டோம் -சல்மான் குர்ஷித்
சென்னை: பாஜக பின்னிய சதி வலையில் சிக்கியதால் கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
2ஜி விவகாரத்தில் கற்பனை குற்றச்சாட்டுகளை முன் வைத்த வினோத் ராய், இப்போது மன்னிப்பு கேட்டுள்ளதன் மூலம் காங்கிரஸ் அப்பழுக்கற்ற ஆட்சியை தந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முன் வந்துள்ளதாக கூறியிருக்கிறார்.
மேலும், பாஜக தீட்டிய சதித்திட்டத்தை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் இருப்பதாக சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

பாஜக ஏஜெண்ட்
காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த அவதூறு பரப்பப்பட்டது வரிசையாக வெளிவந்து கொண்டிருப்பதாகவும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ஆதாரமற்ற முறையில் சி.ஏ.ஜி. தலைவர் வினோத் ராய் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டு அரசியல் ரீதியாக பா.ஜ.க. பலனடைந்து ஆட்சி அமைத்ததாகவும் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார். இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

கற்பனை அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியது தொடர்பாக கற்பனையான அறிக்கையை ஜோடித்ததாகவும் இந்த அறிக்கையை ஒருபோதும் வினோத் ராயால் நிரூபிக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை எனவும் அவர் கூறியிருக்கிறார். வி.கே.சிங், கிரண் பேடி, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பா.ஜ.கவினர் அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுத்து காங்கிரசுக்கு எதிரான மனநிலையில் மக்களை மாற்றினர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

நன்றிக்கடன்
பாஜக ஆட்சி அமைய உதவியதற்கு நன்றிக்கடனாக மோடி பிரதமரானதும் முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், வங்கி தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் இது மத்திய இணை அமைச்சர் பதவிக்கு இணையானது எனவும் கூறியுள்ளார். இதேபோல் ஜெனரல் வி.கே.சிங் இரு முறை பா.ஜ.க. எம்பியாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருக்கிறார் என்றும் கிரண் பேடி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார் எனவும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

வாய்மை வென்றது
மேலும், பாபா ராம்தேவ் பெரும் தொழிலதிபராக உருவெடுத்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வணிகம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பினருக்கு எதிராக கொடுமைகள் நிகழ்ந்த நிலையிலும் அன்னா ஹசாரே அமைதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வாய்மை வென்றது
வாய்மை வென்றது என்பதை தேசம் அறிய வேண்டும் என்றும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசை அகற்ற நடந்த சதித் திட்டம் குறித்து காங்கிரஸார் ஒவ்வொருவரும் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications