Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூடுபிடிக்குது.. ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து 1 மாதம் தொடர் போராட்டம்.. பிளான் போட்ட காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சி வலுவாக எதிர்ப்பைக் காட்டவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அதானிக்கு சலுகை

அதானிக்கு சலுகை

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, "ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கையை முடக்குவதற்காக பாஜக அரசு சதி செய்துள்ளது. இது சர்வாதிகார அராஜகம். ஜனநாயக மரபுகளுக்கு புறம்பான மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே எதிர்ப்பு எழுந்துள்ளது. சட்டம், ஒழுங்குக்கு ஊறு ஏற்படாமல், காந்திய வழியில் ராகுல் காந்தி, இந்த விஷயத்தை கையாண்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பது பிரதமர் மோடியின் எண்ணம். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினால் அதற்கு ஆளுங்கட்சி பதில் சொல்ல வேண்டும். அரசு பதில் சொன்னால் அது சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும், அதன் உண்மையை வெளிக்கொணர வேண்டும், அது போன்ற ஒரு சூழல் வரக்கூடாது என்பதற்காக தனது நண்பரான அதானியை காப்பாற்றுவதற்காக ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் மோடி தடுத்துள்ளார். இந்தியாவில் எந்த தொழிலதிபர்களுக்கும் கிடைக்காத சலுகைகள், எப்படி அதானிக்கு மட்டும் கிடைக்கிறது?

அறவழி போராட்டம்

அறவழி போராட்டம்

ராகுல் காந்தி பதவி பறிப்பு, அதானி விவகாரம் குறித்து நாடு முழுவதும் ஒரு மாதகால தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் கடந்த 26ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காந்தி சிலை முன்பு தமிழ்நாடு முழுவதும் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. சட்டசபையிலும், மாநகராட்சி மன்றத்திலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். கடந்த 24ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜெய் பாரத் சத்தியாகிரகம் என்ற பெயரில் ஒருமாத கால தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 29ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. அவர் டெல்லியில் இருக்க வேண்டிய காரணத்தால் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவர் வர இயலவில்லை.

 தொடர் போராட்டங்கள்

தொடர் போராட்டங்கள்

அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படும். சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்ற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும். மேலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு மோடி - அதானி கூட்டுக் கொள்ளை குறித்தும், ஜனநாயக விரோதமாக ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். மேலும், பாஜக. ஆட்சியை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 'பாஜகவின் ஜனநாயகப் படுகொலை" என்ற தலைப்பில் பிரச்சார கையேடு வருகிற மார்ச் 31ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும். ஜெய்பாரத் சத்தியாகிரக போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை கோரும் வகையில் ராகுல் காந்தி விடுக்கும் செய்தியை சமூக ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களின் வழியே பரப்புவதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். ஏப்ரல் 1ஆம் தேதி வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகளின் அளவில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி அளிப்பார்கள்.

 காந்தி, அம்பேத்கர் சிலைகள் முன்பாக

காந்தி, அம்பேத்கர் சிலைகள் முன்பாக

ஏப்ரல் 3ஆம் தேதி முதல் சென்னையில் பி.ஆர்.அம்பேத்கர் அல்லது மகாத்மா காந்தி சிலைகள் முன்பு தமிழ்நாடு காங்கிரசின் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் துறை, சிறுபான்மையினர் துறைகளின் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 3ஆம் தேதி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் சார்பில் பிரதமர் மோடிக்கு கேள்விகள் எழுப்பி அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெருந்திரளான மகளிர் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள். ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி மாவட்ட தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும். தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் மாநில அளவில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடத்தப்படும். அதில் தேசியத் தலைவர்கள் பங்கேற்பார்கள். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

மிகப்பெரிய அளவில்

மிகப்பெரிய அளவில்

ஏப்ரல் மாதம் 2-வது வாரம் டெல்லியில் ஜெய் பாரத் மகா சத்தியாகிரகம் நடத்தப்படும். இதற்கான தேதி அறிவிக்கப்பட்டு அதில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி இன்று முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள கண்டன போராட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் வெற்றி பெறுகிற வகையில் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டோடு தங்களது பங்களிப்பை மிகப்பெரிய அளவில் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய பங்களிப்பின் மூலமே பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்று ராகுல் காந்தியின் கரங்கள் வலிமைப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+