ராஜேஷ்குமார் பேச்சால் காங்கிரஸுக்குள் பஞ்சாயத்து.. தவெக கூட்டணி முறிகிறதா? பின்னணியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்றே மாதங்களில் தவெக - காங்கிரஸ் உறவு கசந்து வரும் நிலையில், தவெகவை விமர்சிப்பதில் காங்கிரஸ் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்திருப்பதாக காங்கிரசில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதை பற்றிதான் நமக்கு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம்.

தமிழகத்தில் ஆட்சியமைத்து 3 மாதங்களில் தவெக - விசிக இடையே மனக்கசப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன.. 2 நாட்களுக்கு முன்புகூட, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறை மானியக்கோரிக்கை கொள்கை குறிப்பு புத்தகத்தில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயர்கள் தவிர்க்கப்பட்ட விவகாரத்தில் விசிக அப்செட் ஆகிவிட்டதாம்..

TVK

எதிர்வினை விசிக

இதுகுறித்து, தவெக கூட்டணி அரசில் இருக்கும் விசிக, இதற்கு கடும் எதிர் வினையாற்ற துவங்கிவிட்டது.. விசிகவின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், இது குறித்து விஜய்க்கு விரிவாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதேபோல விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வனும் கடுமையான நீண்ட பதிவு செய்திருக்கிறார்..

அதுமட்டுமல்ல, தவெக அரசில் அமைச்சராக இருக்கும் விசிகவின் வன்னியரசுவை அழைத்து, இது குறித்து முதல்வரை சந்தித்து பேசுமாறும், தவறை திருத்த வேண்டும் என வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் விசிக தலைவர் திருமாவளவன். இப்படி தவெக - விசிக இடையே விரிசல் விரிவடைந்து வரும் நிலையில் காங்கிரசும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.. இதை பற்றின பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் - தவெக

அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறார்கள் தவெக அமைச்சர்கள். அவர்களின் பேச்சுக்கள் காங்கிரசையும், ராகுல் காந்தியையும் சீண்டுவதாக இருக்கிறது. இதனை எதிர்த்து துவக்கத்தில் மென்மையாக கண்டித்துப் பார்த்து தமிழக காங்கிரஸ். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் மற்றும் அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் மென்மையாக எதிர்வினை ஆற்றினார்கள்.

இதற்கு காரணம், பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திப் பேச வேண்டாம் என்று தவெக அமைச்சர்களுக்கு விஜய் கடிவாளம் போடுவார் என்பதால் தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்

மாறாக, விஜய்யின் கண் அசைவில் தான், காங்கிரசை சீண்டும் வேலைகளை தவெக அமைச்சர்கள் பேசுகிறார்களாம்.. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க விஜய்யும் அவரது தரப்பும் ஏற்கவில்லை.. பாஜகவை குளிர்விக்க நடக்கும் யோசணையாகவும் இருக்கலாம்.. எதுவாக இருந்தாலும் ராகுலை புறக்கணிக்கும் தவெக அரசியலை ஜீரணிக்க முடியாது என்று உணர்ந்து, இப்போது தங்களின் டோனை வேகமாக ட்யூன் செய்யத் தொடங்கியிருக்கிறார்களாம்.

அந்த வகையில் தான், கன்னியாகுமரியில் நேற்று நடந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், " ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம். 2 அமைச்சர்களும் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம். எங்களுக்கு கட்சி தான் பெரியது" என்று தவெகவுக்கு பதிலடி தரும் வகையில் எச்சரிக்கை செய்திருந்தார்.

ராஜேஷ் குமார் செம கோபம்

மாணிக்கம் தாக்கூரும் குட்டி கதைச் சொல்லி விஜய்யை முதல்முறையாக சீண்ட தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரசின் மற்றொரு அமைச்சரான விஸ்வநாதனுக்கு, அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதில் உடன்பாடில்லையாம்.

அதாவது, ராஜேஷ்குமார் பேசியதை அடுத்து அவரை தொடர்பு கொண்டிருக்கிறார் விஸ்வநாதன். அப்போது, " மேலிடத்தின் பெர்மிசன் இல்லாமல் எப்படி இப்படி பேசுகிறாய். இதனால் தவெகவுக்கும் நமக்கும் முரண்பாடு வருமே! இதையெல்லாம் யோசிக்க மாட்டாயா? தவெகவை எச்சரிக்கை செய்ற மாதிரி பேசினால், முதல்வர் நம்மை பத்தி என்ன நினைப்பார்? " என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் விஸ்வநாதன்.

கூட்டணி முறியுமா

அதற்கு ராஜேஷ்குமார், "முரண்பாடு வந்தால் வரட்டும். ராகுலை ஒரு பொருட்டாக இவர்கள் மதிக்காதபோது, நாம் அமைதியாக இருந்தால் நம்முடைய கட்சி தொண்டர்களே நம்மை கேள்வி கேட்பார்கள். ராகுலை விட பதவி பெரிதல்ல எனக்கு. நீங்க வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கோங்க" என்று கறாராக சொல்லியிருக்கிறார் என்கின்றனர் கதர்ச்சட்டையினர்.

"அமைச்சரவையிலிருந்து விலகுவோம்" என்பதில் காங்கிரஸ் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக காங்கிரசில் பேசப்படுகிறது. தனது கருத்துக்கு ஆதரவில்லை என விஸ்வநாதனுக்கு புரிய வந்திருப்பதால் இனி அவரது டோனும் மாறலாம் என்கிற பேச்சும் சத்தியமூர்த்தி பவனில் எதிரொலிக்கிறது...!!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+