தோற்றாலும் காங்கிரஸ் மகிழ்ச்சி? வென்றாலும் பாஜக சோகம்? மோடிக்கு தலைவலி தந்த தேர்தல் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி ஆட்சியைக் கிண்டலடித்து வந்த மோடி, தற்போது தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 293 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

lok sabha election result 2024 Tamil Nadu lok sabha election result 2024

இன்று பிரதமர் மோடி 17ஆவது அமைச்சரவையைக் கலைப்பதற்கான முடிவை மேற்கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையாகப் பேசி வந்த பாஜக வெறும் 240 இடங்களைத்தான் வென்றது.

தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க 272 சீட்டுகள் தேவை. ஆகவே, பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி12 இடங்களில் வென்றுள்ளது. அதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால், என்.டி.ஏ கூட்டணி ஆட்சியில் கிங் மேக்கர்களாக இந்த இரண்டு தலைவர்களும் மாறியுள்ளனர்.

இந்த இருவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர் சரத்பவார் மேற்கொண்டுள்ளதாகத் தகவல் கசிந்தது. அவர் இது குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் தொலைப்பேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியானது.

lok sabha election result 2024 Tamil Nadu lok sabha election result 2024

ஆனால், இன்று ஊடகங்களைச் சந்தித்த சரத்பவார், "தான் நிதீஷ் மற்றும் சந்திரபாபு ஆகிய இருவரிடமும் தொலைப்பேசியில் உரையாடவே இல்லை" என்று மறுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் 'என்.டி.ஏ' கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர், "இந்த வெற்றி ஆந்திர அரசியல் வரலாற்றில் மட்டும் அல்ல, தெலுங்கு தேசம் வரலாற்றில் கூட மிக மிக முக்கியமானது" என்றவர், "என்.டி.ஏ கூட்டணியில்தான் தொடர்ந்து இருப்போம்" என்று உறுதியளித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட பல நிறுவனங்கள் பாஜக முழு பெரும்பான்மை பெறும் என்றே கூறியிருந்தன. ஆனால், முடிவுகள் தொங்கு சபை உருவாக்கியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "சர்வாதிகார ஒற்றை ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை. கூட்டணி ஆட்சியைத்தான் விரும்புகின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன" என்று கூறியுள்ளார்.

மொத்தம் 99 தொகுதிகளைக் கைப்பற்றி நாடாளுமன்ற அவையில் நாட்டிலேயே 2வது மிகப்பெரிய கட்சியாக இந்தியத் தேசிய காங்கிரஸ் இந்த முறை அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சி படு குழியில் கிடந்த காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வரப்பிரசாதம்.. கடந்த 2019 தேர்தலில் வெறும் 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இந்த முறை கூடுதலாக 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக 22 தொகுதிகளைக் கைப்பற்றியது.

அத்துடன் இத கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் போட்டியிட்ட இடங்களில் வென்றதன் மூலம் 40 தொகுதிகளை திமுக அணி வென்றுள்ளது.

உபி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சரியான அடியைப் பெற்றுள்ள பாஜக, இன்னொரு பக்கத்தில் கேரளாவில் முதன்முதலாகக் கணக்கைத் தொடங்கியது, ஒடிசாவில் ஆளும் கட்சியாக மலர்ந்துள்ளது என சில சாதகமான அம்சங்களையும் பெற்றுள்ளதை மறுப்பதற்கு இல்லை.

இருந்தாலும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு 1 பிரதமர் என்று 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமரை நாடு சந்திக்கும் என்று கூட்டணி ஆட்சியை ஏளனம் செய்து வந்த மோடி, இப்போது மீண்டும் கூட்டணி ஆட்சி மூலம்தான் 3ஆவது முறையாகப் பிரதமராகப் போகிறார் என்பது விசித்திரமான திருப்பம்.
அதிகார பலம் பொருந்தியவர் மோடி என்ற பிம்பம் இப்போது உடைந்து போய் உள்ளது. அதை மனதில் வைத்து பதிலடி கொடுக்க காங்கிரஸ் இப்போதே தயாராகிவிட்டது.

lok sabha election result 2024 Tamil Nadu lok sabha election result 2024

கூட்டணி ஆட்சியின் மூலம் பிரதமராக உள்ள மோடியைப் பார்த்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் தளத்தில், "தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டு அமித்ஷா கையேந்தி நிற்கிறார். பாஜக விரித்த வலையில் அக்கட்சியே மாட்டிக் கொண்டுள்ளது" என்று கிண்டலடித்திருக்கிறார்.

தோற்றாலும் காங்கிரசுக்கு மகிழ்ச்சிதான். வென்றாலும் பாஜகவுக்கு அது சோகம்தான். இந்தத் தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ள படிப்பினை இதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+