எதிரி ஆயுதத்தை எடுத்து.. திரும்ப வீசும் யுக்தி! அமித் ஷா ஸ்டைலில் பாஜகவிற்கு காங்கிரஸ் வைக்கும் செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் என்டிஏ கூட்டணியை உடைக்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.

பொதுவாக பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அது உண்மையோ இல்லையோ.. "ஆபரேஷன் தாமரை" என்பதை நாடு முழுக்க பல மாநிலங்களில் கொண்டு வந்தது அமித் ஷாதான் என்ற வாதம் உள்ளது. உதாரணமாக கர்நாடக அரசு கவிழ்ந்தது, ராஜஸ்தான் அரசு கவிழ்ந்தது, மத்திய பிரதேச அரசு கவிழ்ந்தது, மகாராஷ்டிரா அரசு கவிழ்ந்தது என்று பல மாநில அரசுகள் கவிழ்ந்ததற்கு பின் "ஆபரேஷன் தாமரை" இருப்பதாக கூறப்படுகிறது.

Congress is planning to break NDA alliance if BJP does not get a single majority

எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பது, எதிர்க்கட்சி கூட்டணியை தங்கள் பக்கம் இழுப்பது என்று அமித் ஷாவின் அரசியல் ஸ்டைல் தனி.

காங்கிரஸ் பிளான்; இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அமித் ஷாவின் இதே ஸ்டைலை பின்பற்றி ஆட்சி அமைக்க ஆலோசனைகள் செய்து வருகிறதாம். அமித் ஷா அஸ்திரத்தை அவருக்கு எதிராகவே காங்கிரஸ் பயன்படுத்த உள்ளதாம். 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் தேசிய அளவில் காட்சிகள் மாறும், அரசியல் கூட்டணிகளும் மாறும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாக நம்பி வருகிறதாம்.

லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகபட்சம் இடங்களை வெல்லும். பாஜகவின் என்டிஏ கூட்டணியை விட அதிக இடங்களை வெல்லும். அதன் பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்க 48 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகலாம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் அதிகபட்ச இடங்கள் உள்ள கட்சி பிரதமர் பதவிக்கு இயற்கையாக உரிமை கோரும். இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும். இந்தியா கூட்டணி அதிக இடங்களை வென்றதும் என்டிஏ கூட்டணி தானாக உடையும். என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகள் தானாக இந்தியா கூட்டணிக்கு செல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

என்ன செய்வார்கள்?: பாஜகவிற்கு தனிப்பட்ட அளவில் 250க்கு கீழ் இடங்கள் வருகிறது. என்டிஏ கூட்டணி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இப்படிப்பட்ட நேரத்தில் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏ கூட்டணிகள் விரும்புமா என்பது கேள்வி. ஏனென்றால் என்டிஏ கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளே பாஜகவுடன் கட்டாயத்தின் பெயரில் இருக்கின்றன. பாஜக வலுவாக இருக்கிறது, அவர்களுடன் நாம் இருக்க வேண்டும், பாஜகவுடன் நாம் இல்லையென்றால் ரெய்டு பாயும் என்ற அச்சத்தில் என்டிஏவில் சிலர் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இப்போதே காங்கிரஸ் பேசி வருகிறதாம். நீங்கள் பாஜகவுடன் ஏன் இருக்கிறீர்கள் என்று தெரியும். பாஜகவுடன் தொடர்ந்து இருந்தால் ஒரு காலத்தில் உங்களையும் காலி செய்து விடுவார்கள். உங்கள் கட்சி காக்கப்பட வேண்டும் என்றால் உடனே என்டிஏ கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் என்று காங்கிரஸ் என்டிஏ கூட்டணிக்கு தூது விட்டு வருகிறதாம். அமித் ஷா அஸ்திரத்தை அவருக்கு எதிராகவே காங்கிரஸ் பயன்படுத்த உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+