"நேபாள நெருக்கடிக்கு காங்கிரஸ் தான் காரணம்".. பீகார் துணை முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என்று வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும், பீகர் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுதரியின் இந்தக் கருத்து அண்டை நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் தலையிடுவதாகும். சாம்ராட் சவுதரி உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுதரி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என்று வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை, அவரின் இந்தக் அவதூறு கருத்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் இந்த கருத்து அண்டை நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும்.

நேபாளம் என்பது சுதந்திரமும், இறையாண்மையும் கொண்ட நாடு. அங்கு நடைபெறும் அரசியல், சமூக சம்பவங்களுக்கு இந்திய காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சொல்வது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி அண்டை நாடுகளின் இறையாண்மையையும், ஜனநாயக மரபுகளையும் மதித்து வந்துள்ளது.
பீகார் துணை முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்லாமல், இந்தியா - நேபாள உறவை பாதிக்கும் வகையிலும் இருக்கின்றன. அண்டை நாடுகளை மதித்து, நல்லுறவை பேணுவது தான் இந்தியாவின் பாரம்பரியக் கொள்கை. அந்தக் கொள்கையை பாஜக தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
எனவே, சாம்ராட் சவுதரி உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறையில் மக்கள் முன்னிலையில் வலுவான முறையில் எதிர்வினையாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications