பாசம் + கூட்டணி தர்மம்.. அரவக்குறிச்சியில் பட்டையை கிளப்பும் ஜோதிமணி.. திமுகவினரே வியக்கிறார்கள்!

செந்தில் பாலாஜிக்காக அரவக்குறிச்சியில் தீவிர பிரச்சாரத்தில் உள்ளார் ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாசம் என்று சொல்வதா, கூட்டணி தர்மம் என்று சொல்வதா தெரியவில்லை... அரவக்குறிச்சியில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறார் ஜோதிமணி!

நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிட்டார். ஆனால் எதிர்தரப்பில் அதிமுக சார்பில் தம்பிதுரை வேட்பாளராக களம் இறங்கியதால் ஏகப்பட்ட அச்சுறுத்தல்கள் ஜோதிமணிக்கு பிரச்சாரத்தின்போது ஏற்பட்டது.

தேர்தல் கமிஷன், மாவட்ட நிர்வாகம், போலீஸ் தரப்பில் குடைச்சல் இருந்து கொண்டே இருந்ததால், ஜோதிமணியால் கரூரில் நிலைமையை தனியாக சமாளிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் செந்தில்பாலாஜி ஜோதிமணிக்காக களம் இறங்கினார். செந்தில்பாலாஜி ஜோதிமணி பக்கத்தில் வந்து நின்றதுமே, இடையூறுகளும், தொந்தரவுகளும் ஓரளவு அடங்கியது. தங்கை ஜோதிமணிக்காக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் செந்தில்பாலாஜி!

நன்றி - விசுவாசம்

நன்றி - விசுவாசம்

செந்தில் பாலாஜி ஸ்டாலினின் பரிந்துரைப்படியே ஜோதிமணிக்காக களம் இறங்கி இருந்தாலும், அந்த நன்றியை ஜோதிமணி இதுவரை மறக்காமல் இருக்கிறார். தன் வேலை முடிந்ததும் ஓய்வுக்குப் போய் விடவில்லை. மாறாக, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். வேட்பாளராக செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை தொகுதியிலேயே ஜோதிமணி முகாமிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி பிரச்சாரத்திற்காக எங்கு போனாலும் கூடவே இவரும் போய் விடுகிறார். ஓய்வு ஒழிச்சல் கிடையாது. டயர்டாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. விடாமல் விரட்டிப் போய் வாக்கு கேட்கிறார். இன்றுகூட அது சம்பந்தமான ட்வீட் போட்டுள்ளார். அதில்,"அரவகுறிச்சி இடைதேர்தல் க. பரமத்தி ஒன்றியம், தொக்குபட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் அமோக ஆதரவில் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில்" என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல் வட்டாரம்

அரசியல் வட்டாரம்

கரூர் தொகுதியை பொறுத்தவரை, செந்தில்பாலாஜிக்கென்று யாரும் பிரச்சாரம் செய்யவே தேவையில்லை என்பது அரசியல் வட்டாரத்துக்கே தெரிந்தாலும், ஜோதிமணிக்கு மனசு கேட்கவில்லை. நன்றிகடன் என்பதையும் தாண்டி, கூட்டணி தர்மத்தை நிலைநாட்டி வருகிறார் ஜோதிமணி.

சீட் விவகாரம்

சீட் விவகாரம்

அதிமுக, திமுக கூட்டணி தலைவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள்.. பக்குவம் நிறைந்தவர்கள்.. தனி செல்வாக்கை பெற்றவர்கள். இருந்தாலும் எம்பி தேர்தல் சீட் விவகாரம் முடிந்ததில் இருந்தே, இரு கட்சி கூட்டணி தலைமையிடம் புகைச்சல், ஈகோ, ஆற்றாமை, அதிருப்தி, ஏமாற்றம் என பல்வேறு உணர்வுகளில் சூழப்பட்டுள்ளனர்.

ஒரே நோக்கம்

ஒரே நோக்கம்

இப்படி இருக்கும்போது, கூட்டணி கட்சிக்காகவும், கூட்டணி தர்மத்துக்காகவும், ஜோதிமணி மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள் எல்லோரையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. முக்கியமாக பொதுமக்கள், ஜோதிமணியின் இந்த நடவடிக்கைகளை விரும்புகிறார்கள். போகிற இடங்களில் நிற்க இடம் கிடைக்காவிட்டாலும் சரி.. எதை பற்றியும் கவலைப்படாமல் அண்ணன் செந்தில் பாலாஜி வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்கிறது!

அனுபவம்

அனுபவம்

கூட்டணியில் இருந்தாலும், இருப்பதாக சொல்லி கொண்டாலும், ஒரு கட்சியை சேர்ந்தவர்கள், இன்னொரு கட்சிக்காக பிரச்சாரம் செய்வதே பெரிய விஷயமாக இக்கால கட்டத்தில் இருக்கும்போது, அனைவரையும் விட வயதிலும், பொறுப்பிலும், அனுபவத்திலும் குறைந்தவரான ஜோதிமணி மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

அணுகுமுறை

அணுகுமுறை

இந்த நல்ல அம்சம், இப்போது திமுக தலைமையிடமே இல்லாத ஒன்றாகும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் திமுக-விசிக உறவை சொல்லலாம். அதனால் கட்சி தலைமை உட்பட தமிழக கட்சி தலைவர்கள் அனைவருமே ஜோதிமணியின் இந்த அழகிய அணுகுமுறையை பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+