சத்தியமூர்த்திபவனில் கேட்ட சத்தம்! எங்கே போனாங்க எல்லோரும்? கோபப்பட்ட கே.எஸ் அழகிரி.. பத்திக்கிச்சே
சென்னை: சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்று அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. தலைவர் மாற்றத்தில் இந்த முறை சிறிய தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த மாதமே மாற்றப்பட வேண்டியவர் இன்னும் மாற்றப்பட வில்லை. ஆனால் அது நிரந்தரம் கிடையாது. சிறிய இடைவெளிக்கு பின் தலைவர் மாற்றப்படுவார். கே .எஸ் அழகிரிக்கு பதிலாக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக வெடித்தது.
உரசல்: இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக வெடித்தது. ஜோதிமணி எம்பி, கோபண்ணா போன்றவர்கள் பொது தளத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தெல்லாம் விவாதம் செய்தனர். இப்போது இந்த கோஷ்டி மோதல் உச்சம் தொட்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.
ஷாக்கிங் கூட்டம்: இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்று அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோர் புறக்கணித்துவிட்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், திமுக, அதிமுக கட்சிகளெல்லாம் பூத் கமிட்டி அமைத்து தீவிரமாக இயக்கி வருகிறது. நாம் இன்னமும் கமிட்டியை அமைக்கக்கூட இல்லை என கூட்டத்தில் சொல்லப்பட்டது. அப்போது, ''இந்த முறை நம் தொகுதிகள் எண்ணிக்கையை திமுக குறைக்கும் என தகவல் வருகிறது. எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்கும் என தெரியாது. எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரியாது. இதில் பூத் கமிட்டி எப்படி அமைப்பது? தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்க எப்படி முடியும் ? பல இடங்களில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை.
அதனால், நம்முடைய சிட்டிங் தொகுதிகளில் மட்டும் பூத் கமிட்டி அமைக்க முயற்சிக்கலாம்'' என சிலர் பேசியுள்ளனர். இதனை அழகிரியும் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், உதயநிதியின் சனாதன பேச்சு குறித்தும் விவாதித்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்படி சர்ச்சைக்குரிய விசயங்களை திமுக தவிர்க்க வேண்டும் என்கிற ரீதியில் விவாதித்திருக்கிறார்கள். இதற்கிடையே, தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட முன்னாள் தலைவர்கள் வருவதில்லை என மாஜிக்கள் மீது டெல்லிக்கு புகார் அனுப்பியுள்ளது சத்தியமூர்த்திபவன்.












Click it and Unblock the Notifications