தமிழிசையின் தந்தை குமரி அனந்தனுக்கு உடல் நலக்குறைவு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான தமிழிசை சௌந்திரராஜனின் தந்தை குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்திய பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் கடந்த சில நாட்களாக திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு குமரி அனந்தன், ஆரணி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாரத்தை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் குமரி அனந்தன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குமரி அனந்தனிடம் மருத்துவர்கள், உடல்நலம் தேறும் வரை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அதுவரை ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே உடல்நலம் தேறிய பின்னர், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக குமரி அனந்தன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications