தமிழக சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம்! டிரெஸ் கோட் கருப்பு! ரெடியாகும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கருப்பு உடை அணிந்து வர திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் நாளை சட்டசபையை விட்டு வெளியே வராமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இது தொடர்பான அறிவுறுத்தல் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இருந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் சென்றிருக்கிறது.

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் இன்று அறவழி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் சட்டசபைக்கு கருப்பு உடை அணிந்து செல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.

கருப்பு உடை

கருப்பு உடை

அதுமட்டுமல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளைய தினம் தனித் தனியாக சட்டசபைக்குள் செல்லாமல் ராகுல் காந்திக்கு ஆதரவான பதாகைகளை தாங்கியபடி குழுவாக சட்டசபைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதேபேல் அவையிலும் ராகுல்காந்தி குறித்து பேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். இதனால் நாளைய தினம் நடைபெறும் சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக சட்டசபையை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறாமல் இரவு உட்பட உள்ளிருப்பு போராட்டத்திற்கு தயாராக வர வேண்டும் என செல்வப்பெருந்தகை ஒவ்வொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் என்பது பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.

பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது

பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது

இதனால் நாளைய தினம் பரபரப்பிற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது. இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டால் சட்டசபை உள்ளிருப்பு போராட்ட திட்டத்தில் மட்டும் மாற்றம் இருக்கும் என்றும் ஆனால் கருப்பு உடை, ராகுல் ஆதரவு பதாகை போன்ற செயல் திட்டகளில் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+