"ஆட்டுக்குட்டி".. காங்கிரஸ் எடுத்த புது ரூட்! இது மட்டும் நடந்தால்! அண்ணாமலைக்கு பறக்க போகும் கிப்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளிப்போம் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இது மக்கள் இடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளது. இதையடுத்து 4 மாதங்களுக்கு முன்பாக பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. 124வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

அதன்பின் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுக்க 124வது நாளாக பெட்ரோல், டீசல் இன்றும் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் தொடர்ந்து விலை 100க்கும் அதிகமாகவே உள்ளது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

முன்னதாக நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு எதிராக நாடு முழுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குரல் கொடுத்தது வருகின்றன.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த நிலையில்தான் நேற்று மதுரை அவனியாபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இதை பற்றி விவாதம் செய்யப்பட்டது. காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச்சட்ட அணியின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரி உயர்விற்கு எதிராக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்ததை விட பெட்ரோல் டீசல் இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளதாக விமர்சனம் வைக்கப்பட்டது.

சவால்

சவால்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டால், அதை பாராட்டுவோம். பாஜக அப்படி செய்யும் பட்சத்தில் அதற்கு பரிசு வழங்குவோம். பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைக்கப்பட்டால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளிப்போம், என்று காங்கிரஸ் கட்சியின் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த தீர்மானம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+