மாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா!
மாணிக்க தாகூர் போட்டியிடும் இடம் எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
சென்னை: யார்தான்ப்பா போட்டியிட போறாங்க.. இளங்கோவனா? மாணிக்தாகூரா? என்னதான் நடக்குது? விருதுநகர் தொகுதியை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
திருநாவுக்கரசர் திருச்சிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கவும் ராகுல் தலையிட்டு அதற்கு திமுகவிடம் சிபாரிசு செய்தார். இருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அதேபோல கிருஷ்ணகிரியை செல்லக்குமார் கேட்கவும் அதற்கும் ஓகே ஆவது போல தெரிகிறது.
இதனால் ஈவிகேஎஸ் நிலைமையோ பரிதாபமாகிவிட்டது. ஈரோட்டில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாலும், கிருஷ்ணகிரி அல்லது விருதுநகர் இந்த இரண்டில் ஒன்று கேட்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் கிருஷ்ணகிரி சிக்கல் என்பதால் விருதுநகரை கணக்கு பண்ணியிருந்தார்.

நெருங்கிய நண்பர்
ஆனால் விருதுநகரை இளங்கோவனுக்கு ஒதுக்க காங்கிரஸ், திமுக இரண்டுமே விரும்பவில்லை. இதனிடையே ராகுலின் நெருங்கிய நண்பர் மாணிக்கதாகூர் விருதுநகரில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

டென்ஷன்
ஆக மொத்தம், கேட்ட தொகுதி கிடைக்காததால் இளங்கோவன் டென்ஷன் ஆகி, தனது ஆதரவாளர்களையும் மாணிக்தாகூருக்கு எதிராக கிளப்பி விட்டுள்ளாராம். அதன்படியே உள்ளடி வேலைகள் கனக்கச்சிதமாக நடக்க.. விஷயம் டெல்லிக்கும் பறந்திருக்கிறது. போட்ட பிளான் ஓரளவு ஒர்க் அவுட் ஆனதால், எப்படியும் விருதுநகர் தனக்கு கிடைத்துவிடும், சிவகங்கைக்கு வேண்டுமானால் மாணிக்கதாகூர் போட்டியிடட்டும் என்று இளங்கோவன் ஏறத்தாழ முடிவு செய்துவிட்டாராம்.

சிவகங்கை
விருதுநகர் தொகுதிக்குள் தனக்கு எதிராக இத்தனை வேலைகள் நடக்கிறதா என்று ஷாக் ஆன மாணிக்க தாகூரோ, போட்டியிட்டால் விருதுநகர்தான் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம். இதனிடையே சிவகங்கையில் ஒரு மல்லுக்கட்டு நடந்து வருகிறது.

ப.சிதம்பரம்
அது என்னவென்றால், ப.சிதம்பரத்துக்கு எதிரான குரூப் ஒன்று, திரும்பவும் கார்த்தி சிதம்பரம் போட்டியிட கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டுள்ளது. பேசாமல் கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலாக மாணிக்கதாகூரையே சிவகங்கையில் நிறுத்தலாம் என்று டெல்லி லாபியிடம் விலாவரியாக எடுத்து சொல்லி வருகிறது.

எந்த தொகுதி?
இந்த விவகாரத்தில் இப்போது மாட்டி கொண்டு முழிப்பது மாணிக்கதாகூர்தான் என்று சொல்லப்படுகிறது. எங்கே நம்மை சிவகங்கையில் நிறுத்திவிட்டு, விருதுநகரை கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்று இப்போதே பீதி கிளம்பி உள்ளதாம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications