காங்கிரஸ்காரர்களுக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை.. மாணிக்கம் தாகூர் குறித்து திமுக விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாடு காங்கிரஸ்காரர்களுக்கும் மூளைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை" என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ஊருக்கு நாலு பேர்கள் கூட இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் என்று திமுக முன்னாள் எம்பி எம்எம் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், "சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான்! திமுகவை ஜெயிக்க வைத்து முதல்வராக்கியது காங்கிரஸ்தான். நம்முடைய ஆதரவு இல்லாமல் அவர்கள் என்றும் ஆட்சி அமைத்தது கிடையாது. சாமிக்குப் பயப்படுகிற ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான். அவர்கள்தான் பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர்" என்றார்.

Congress members have nothing to do with brains DMK s criticism regarding Manickam Tagore

இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக முன்னாள் எம்பி புதுக்கோட்டை எம்எம் அப்துல்லா வெளியிட்ட பதிவில், "திராவிடர் கழகம் அதாவது தி.க தான் கடவுள் மறுப்பு என்பதனை வெளிப்படையாக பிரகடனப்படுத்திய திராவிட இயக்க கழகமே தவிர திமுகவோ அதிமுகவோ அல்லது திராவிட இயக்க சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட பிற கட்சிகளோ கடவுள் மறுப்பை கொள்கையாக வைத்துக் கொள்ளவில்லை!!

பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை உருவாக்கிய போது மிகத் தெளிவாகவே "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதுதான் திமுகவின் கொள்கை என வெளிப்படையாகவே அறிவித்தார். இன்றைக்கும் திமுக அவர் வழியில் மூட நம்பிக்கை எதிர்ப்பு கட்சியாக, பார்பனீயத்திற்கு எதிராக உள்ளதே தவிர கடவுள் மறுப்பு கட்சியாக ஒரு போதும் இல்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்ற அளவில் தான் உள்ளது.

எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் நான் பார்த்த அளவில் நேர்மையோடு சொல்கிறேன்.. ஒப்பீட்டு அளவில் கடவுள் வழிபாட்டாளர்களை விட கடவுள் மறுப்பாளர்கள் மிக நேர்மையானவர்களாக இருக்கிறார்கள்!! தவறு செய்து விட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்கும், பரிகாரம் செய்யும் சிஸ்டம் அவர்களிடம் இல்லாததால் தனது மனசாட்சிக்கு நேர்மையாக கை, வாய் சுத்தமாக சொன்ன சொல்படி நடப்பவர்களாக பெரும்பாலான நாத்தீரகள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

அதே போல கடவுளை நம்புகிறவர்களை விட நாத்தீகர்கள் அதிக ஆயுட்காலம் வாழ்வதையும் நான் பார்க்கிறேன். தனது மனசாட்சிக்கு விரோதமின்றி இயங்குவதால் நாத்தீகர்களுக்கு மன அழுத்தம் இருப்பதில்லை. அதுவே அவர்கள் ஆயுளை நீட்டிக்கும் காரணியாக அமைந்து விடுகிறது. என் வார்த்தையில் சந்தேகம் இருந்தால் உங்களுக்குத் தெரிந்த தி.க காரர்களை பாருங்கள்.. நீளாயுளோடு ஆரோக்கியமாக இருப்பார்கள்!!!

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் திருடனாக இருக்கிறான் என்கிறார் அண்ணன் மாணிக்கம் தாகூர் . நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை கோர்ட்டில் தண்டிக்கப்பட்ட திருடர்களை கணக்கெடுத்தால் அதில் 99% பேர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகத்தான் இருப்பார்கள்! இதை வைத்து கடவுள் வழிபடுபவர்கள் திருடர்கள் என்று சொல்லலாமா?

கடவுளை நம்பிய ராஜீவ்காந்தி போபர்ஸ் ஊழலில் கொள்ளை அடித்து ஆட்சியையும் இழந்தார். இதை வைத்து கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அத்தனை பேரும் திருடர்கள் என்று முடிவுக்கு வரலாமா? தேர்தலில் கூட்டணி வைத்து திமுக தயவால் ஜெயித்து விட்டு..விரலில் வைத்த மை காய்வதற்குள் விஜயிடம் ஓடிப் போனார் கடவுள் நம்பிக்கை உடைய அண்ணன் மாணிக்கம் தாகூர். இதை வைத்து கடவுள் நம்பிக்கை உடைய அத்தனை பேரும் நம்பிக்கை துரோகிகள் ஃபிராடுகள் என்ற முடிவுக்கு வர முடியுமா? இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+