சிதம்பரத்தில் பரபரப்பு.. திருமாவளவன் பங்கேற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங். வெளிநடப்பு
சென்னை: சிதம்பரத்தில் திருமாவளவன் பங்கேற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ளாமல் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில், ரவிக்குமாரும், அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

திருமாவளவன், பானை என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், சிதம்பரத்தில், திருமாவளவன் பங்கேற்ற, வேட்பாளர் அறிமுக கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் அமர்வதற்கு இடம் அளிக்கவில்லை என்றும், உரிய மரியாதை தரவில்லை எனவும் குற்றம் சாட்டி அக்கட்சியினர் பங்கேற்காமல் வெளியேறினர்.
கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த உரசல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications