அன்று ஜெயலலிதா எதிர்த்தார்.. எடப்பாடி கையெழுத்திட்டார்.. மின் கட்டண உயர்வு குறித்து காங். எம்எல்ஏ
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறுகையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான். மத்திய அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்தில் கையெழுத்திட்டால் தமிழக மாநில உரிமைககள் பறி போகும். கடன் பெற முடியாத சூழல் உருவாகும் என கூறி அந்த திட்டத்தில் கையெழுத்திட ஜெயலலிதா அப்போது மறுத்துவிட்டார்.

மறைவு
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு அந்த உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டுவிட்டார். இதனால் நம்மால் எங்கும் கடன் வாங்க முடியாத சூழல் எழுந்துள்ளது என்றார். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை
இது குறித்து அவர் சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மின்சாரத் துறைக்கு ரூ 12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. மத்திய மின் துறை 7 முறையும், மேல்முறையீட்டு ஆணையம் ஒரு முறையும் ஆர் இ பி சி எஃப் சி 5 முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையும் என ஒட்டுமொத்தமாக 28 முறை மின் கட்டணங்களை உயர்தத வேண்டும் என தமிழக மின்வாரியத்திற்கு கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.

கட்டணம் உயர்த்த வேண்டிய நிலை
அதனால் வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மின்சாரத் துறையை மீட்டெடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. தமிழகத்தில் வரக் கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் தேவைகளுக்கு ஏற்க கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி நாம் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
Recommended Video

மின் கட்டண மாற்றம்
குறிப்பாக அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட மின்துறையை பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் மேம்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டணங்களில் மாற்றங்களை செய்கிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications