சட்டசபையில் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் எனவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலக தயார் என்று காங்கிரஸ் அமச்சர் ராஜேஷ்குமார் நேற்று பேசியிருந்த நிலையில் தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது.

தமிழக சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தார். காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக தாரகை கத்பர்ட் அங்கீகரிக்கப்பட்டதால் அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை தவெக எம்.எல்.ஏக்கள் வரிசையில் தாரகை கத்பர்ட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Congress MLA Tharahai Cuthbert allotted a seat in the opposition benches of the Legislative Assembly

சட்டமன்றக்குழு தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கான இடம் மாற்றப்பட்டதாக தெரிகிறது. பாமக சட்டமன்றக்குழு தலைவராக உள்ள சவுமியா அன்புமணி அருகில் தாரகை கத்பர்ட் அமைர்ந்துள்ளார். தாரகை கத்பர்ட்டிற்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திமுக கொறடா எ.வ.வேலு, தங்கள் பக்கம் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிமுன் அன்சாரி, ஜவஹிருல்லா ஆகியோருக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று எ.வ. வேலு கோரிய நிலையில், அது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.

தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யை பிரதமர் வேட்பாளராக அமைச்சர்கள் முன்னிறுத்தி பேசியதால், காங்கிரஸ் கட்சி கடும் அப்செட் ஆனது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் எனவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலக தயார் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று பேசியிருந்தார்.

இந்த பரப்பரப்புக்கு நடுவே காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் இடம் மாறி அமர்ந்தது சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது. எனினும், சட்டமன்றக்குழு தலைவர் என்ற அடிப்படையில், தாரகை கத்பர்ட்டிற்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாக சபாநாயகர் விளக்கம் அளித்த பிறகே இந்த பரபரப்பு சற்று தணிந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தாரகை கத்பர்ட் , தவெக வேட்பாளர் பிரேம் அலெக்சு லாரன்சை வீழ்த்தி வெற்றி பெற்றார். காங்கிரஸ் தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், அந்த கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையிலும் இடம் பெற்றனர். தமிழக காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தாரகை கத்பர்ட் கடந்த மாதம் அக்கட்சி எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். துணைத் தலைவராக ஜமால் முகமது யூனுஸ் மற்றும் செயலாளராக பிரவீன் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+