இது என்ன 100 நாள் படமா? தவெக ஆட்சியைப் புகழ? விஜயை குஷிப்படுத்தும் எம்எல்ஏக்கள்! கிறிஸ்டோபர் சுளீர்!
திண்டுக்கல்: 100 நாள் படம் ஓடியது போல தவெகவின் ஆட்சியை கொண்டாட தேவையில்லை எனவும், முதல்வர் விஜய்யை குஷிப் படுத்த எம்எல்ஏகள் பிரதமர் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் என்று புகழ் பாடி வருவதாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கூறியுள்ளார். மேலும், ஜோசியர் போல் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் அமைந்துள்ள அன்னை தெரசா பல்கலை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்துகொண்டார்..

அப்போது பேசிய அவர்,""தவெக அரசின் 100 நாள் ஆட்சி 100 வது நாள் படம் அல்ல அதனை கொண்டாடுவதற்கு.தற்போது அமைத்துள்ள அரசு புதியதாக உள்ளது. ஆனால் பொது மக்களிடம் விசாரித்ததில் ஊழல், மற்றும் கமிஷன் தற்போது குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.
கிறிஸ்டோபர் திலக்
மேலும் சட்டசபையை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை தொடர்ந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதனை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த பிரதமர் யார் என தர வரிசையில் விஜய் மூன்றாவது இடம் பெற்றது பற்றி பேசி வருகிறார். அந்த கருத்து கணிப்பு நடத்தியது யார்? எது எவ்வாறு நடத்தப்பட்டது? அதன் நிறுவனம் என்ன? இந்த கருத்துக்கணிப்பு முடிவில் பின்பக்கம் இருக்கும் அரசியல் பின்புலம் என்ன என்றும், இது உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிய வேண்டும்.
பிரதமர் போட்டி
இது போல தான் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கருத்துக்கணிப்பு வெளியானது. எனவே இது போன்று கருத்துகணிப்புகள் வைத்து பேச கூடாது. மேலும் மக்களுக்கு தேவையான விஷயங்களை விட்டு விட்டு இது போன்ற விமர்சனங்களை தவெக எம்எல்ஏ கள் தங்களின் தலைவரை குஷிப்படுத்த பிட்டுகளை போட்டு வருவதாகவும் இதனையே மீடியாக்கள் வெளிக்காட்டி வருகினேறன.
தவெக கூட்டணி
மேலும் திமுக, தவெக கூட்டணியில் பயணிக்கும் போது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றமாதிரி தங்களை மாற்றி கொண்டு செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் தற்போது சக்கரை பருப்பு உள்ளிட்டவைகள் கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, இதனை உடனையாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்திற்கு வழங்கக் கூடிய நிதி உதவிகளை மத்திய அரசு கொடுப்பது குறித்து இனிமேல் தான் தெரியும்.
எடப்பாடி பழனிசாமி
காவிரி நீர் குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஆலோசனை செய்வது போல, தமிழகத்திலும் அனைத்து கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்த மன பக்குவம் வேண்டும், அதை விட்டுவிட்டு நமக்குள்ளே பேசி வந்தால் அது சரியாக வராது. எடப்பாடி பழனிசாமி சமீபமாக தவெக அரசு அரசு நீண்ட நாள் ஆட்சி அமைக்காது என தெரிவித்து வருகிறார். அவர் என்ன ஜோசியரா? சினிமா படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் வடிவேல் நடித்த காட்சியில் தினந்தோறும் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் இளநீர் தேங்காயை இழுப்பது போல எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் சென்று வருகின்றனர். அதன் பயம் காரணமாக எடப்பாடி அவர்களின் அணியினரை குஷிப் படுத்த இவ்வாறு பேசி வருகிறார்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
