OneIndia Exclusive: ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆட்டம் சுமார் தான்.. கார்த்தி சிதம்பரம் கருத்து
சென்னை: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நமது ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற வீரர்களைப் பாராட்டிய கார்த்தி சிதம்பரம், அதேநேரம் இந்த ஒலிம்பிக்கில் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் ஆட்டம் மிகவும் சுமாராக இருந்தது விமர்சித்துள்ளார்..
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் நமது ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பெர்பாமன்ஸ் சுமாராகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொம்ப சுமார்: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அதாவது பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல நம்பிக்கை நட்சத்திரங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டனர். இன்னும் சில நம்பிக்கைகள் உள்ளன.. ஆனால் நமது பெர்பாமன்ஸ் மிக சுமாராக இருந்தது என்றே கூற வேண்டும்" என்றார்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்த எடுத்து வரும் முயற்சிகள் குறித்துப் பேசிய அவர், "இந்தியா ஒலிம்பிக்கை நடத்தினால் அது பேரழிவாகவே இருக்கும்" என்று விமர்சித்தார்.
ஒலிம்பிக் தொடர்: இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "நாம் முதலில் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும். விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாற வேண்டும்.. அதுவே நமது முதல் இலக்காக இருக்க வேண்டும்.. அதை நாம் இன்னும் நெருங்கக் கூட இல்லை. மேலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு அதிக செலவாகும்..
மீண்டும் பயன்படாத பல உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டி இருக்கும். ஏனென்றால் அந்த அரங்குகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் அளவுக்கு அதில் போட்டிகள் இருக்காது. ஏற்கனவே நமது நாட்டில் இருக்கும் மைதானங்களை எடுத்துப் பார்த்தாலே இது உங்களுக்கு புரிந்துவிடும். நாம் இந்த மைதானங்களை மிக மிகக் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.
பெரிய கேள்வி: ஏற்கனவே தேவையான உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகள், ஒலிம்பிக்கை நடத்தக் கொஞ்சம் கூடுதல் உள்கட்டமைப்பை உருவாக்கினால் அது பரவாயில்லை.. ஆனால் அத்தகைய உள்கட்டமைப்பு இல்லாத நாடுகளுக்கு இது தேவைதானா என்பது பெரிய கேள்வி..
ஏனென்றால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மைதானங்கள் மட்டுமின்றி.. ஹோட்டல் அறைகள், சாலைகள், சுரங்கப்பாதை எனப் பல உட்கட்டமைப்பை நாம் குறுகிய காலத்தில் உருவாக்க வேண்டும். எனவே, நாம் அதைச் செய்ய முயன்றால் அது ஒரு தவறான செயலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.. அது தேவையில்லாத ஒன்று என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications