திடீரென மயங்கிய காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில்! உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர்: தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில், திடீரென அவரது உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்தது. இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழ்நாட்டிற்கு 2024-2025 கல்வி ஆண்டுக்கான சமக்ரா சிக்சா கல்வி நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதற்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் இது குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

உண்ணாவிரதம்
மத்திய அரசு நிதியை விடுவிக்காததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசுக்கான சமக்ரா சிக்சா நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். நேற்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.
மருத்துவமனையில் அனுமதி
இன்று மாலை அவருக்குத் திடீரென உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சசிகாந்த் செந்திலுக்கு முதலுதவி தரப்பட்டது. ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து சசிகாந்த் செந்தில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் அங்குச் சிகிச்சை பெற்று வருகிறார்.. இன்றிரவு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதேநேரம் சிகிச்சை முடிந்த பிறகு, சசிகாந்த் செந்தில் தனது அலுவலகத்திற்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவுள்ளார்.
பலரும் ஆதரவு
சசிகாந்த் செந்திலின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸின் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சசிகாந்த் செந்திலை இன்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும், விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பல்வேறு தரப்பினரும் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பலரும் சசிகாந்த் செந்திலை நேரில் சந்தித்தும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய அரசு சொல்வது என்ன
மத்திய அரசு சமக்ரா சிக்சா கல்வி நிதியைத் தரவில்லை என்பதைக் கண்டித்தே சசிகாந்த் செந்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். தமிழக அரசும் பல முறை இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், சமக்ரா சிக்சா என்பது புதிய கல்விக் கொள்கையுடன் லிங்க் செய்யப்பட்டது என்றும் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் சமக்ரா சிக்சா கல்வி நிதியைத் தர முடியாது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications