Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொளுத்தி போட்ட எடப்பாடி பழனிசாமி! கொழுந்து விட்டு எரியும் காங்கிரஸ்! திமுகவுக்கு விஜய் வசந்த் பிரஷர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியில் பங்கு வேண்டும், கூடுதல் எண்ணிக்கையில் சட்டசபை தொகுதிகள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளது திமுக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, ஐயூஎம்எல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

vijay vasanth congress

அது போல் அதிமுக கூட்டணியில் பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தவெகவின் நிலைப்பாடு குறித்து தெரியவில்லை. அது போல் பாமக, தேமுதிக, அமமுக யாருடன் கூட்டணிக்குச் செல்வார்கள் என்பது தெரியவில்லை.

அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இந்த கூட்டணி கணக்குகள் தெரிந்து விடும் என தெரிகிறது. இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய தவெக, ஆட்சியில் பங்கு கொடுப்பதாக கூறியுள்ளார். இதைத்தான் விசிக கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்தது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் அது போன்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளில் 117 தொகுதிகள், அதாவது சரி பாதி தொகுதிகளை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாம். அது போல் ஆட்சியில் பங்கு கேட்கவும் முடிவு செய்துள்ளனராம்.

234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெல்ல வேண்டியது உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியே 117 தொகுதிகளை கேட்பதால் அந்த கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொளுத்தி போட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர், முதலில் பாஜகவிடம் இருந்து அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றட்டும் என்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக கேட்கிறீர்கள். இது தான் அனைத்து காங்கிரஸ்காரர்களின் ஆசையாக இருக்கும். திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறோம்.

எனவே ஆட்சியில் பங்கு வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு காங்கிரஸாரின் விருப்பமாகும். ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தார்.

அண்மைக்காலமாக காங்கிரஸ்- திமுக இடையே உரசல்கள் வருகின்றன. காங்கிரஸ் குறித்து திமுக நிர்வாகிகள் விமர்சிப்பதும், அதற்கு காங்கிரஸ் காட்டமான பதிலை தருவதும் என இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சிவா பேசிய போது அவரது கருத்து காமராஜருக்கு எதிராகிவிட்டது. அப்போது இரு கட்சிகளும் வார்த்தை போரில் மோதி கொண்டனர்.

காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் ஒரு நிர்வாகி இணைந்த போது கூட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டார். தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக" செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஜோதிமணி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். "கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜென்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல" என ஜோதிமணி கண்டனம் தெரிவித்திருந்தார்.

அது போல் கடந்த வாரம் ஒரு திருமண விழாவில் ஜோதிமணி முன்னிலையில் ஐ.பெரியசாமி பேசுகையில், "பணக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் செல்வார்கள்" என விமர்சித்திருந்தார். இதுவும் கண்டனத்தை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சியில் பங்கு கூடுதல் தொகுதிகள் என கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 173 தொகுதிகளிலும் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக தலா 6 இடங்களிலும் ஐயூஎம்எல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 3 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+