அதிரடி மூவ்.. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு.. திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவி
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான் திடீர் அதிரடி மாற்றமாக, கடந்த சனிக்கிழமை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அடுத்தகட்ட அதிரடியாக இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

பல்வேறு தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது.
*மாநில தேர்தல் குழுவிற்கு கே.எஸ்.அழகிரி தலைவராக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம், ராமசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ், குஷ்பு உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள முக்கியப்புள்ளிகளாகும்.
*ஒருங்கிணைப்பு குழு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், குமரி அனந்தன், தங்கபாலு, திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், உள்ளிட்டோர் உள்ளனர்.
*பிரச்சார கமிட்டி, திருநாவுக்கரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹாரூன் துணைத் தலைவராகவும், குஷ்பு ஏற்பாட்டாளராகவும் செயல்படுவார்கள். இந்த குழுவில், விஜயதரணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட 35 பேர் உள்ளனர்.
*விளம்பர கமிட்டிக்கு கே.வி.தங்கபாலு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷண்முகம் துணை தலைவராகவும், ஜோதி மணி ஏற்பாட்டாளராகவும் செயல்படுவார்கள். இந்த குழுவில் மொத்தம் 36 பேர் உள்ளனர்.
*பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான மீடியா ஒருங்கிணைப்பு குழுவில், கோபண்ணா துணை தலைவராகவும், மணிரத்தினம் ஏற்பாட்டாளராகவும் செயல்படுவர். இக்குழுவின் எண்ணிக்கை 35.
* இதேபோல கே.ஆர்.ராமசாமி தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஸ்வநாதன், தணிகாச்சலம் உட்பட 6 பேர் உள்ளனர். இந்த அறிவிப்புகளை, காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி ஒப்புதலுடன், தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்ததால், பிற கோஷ்டியினருக்கு எழுந்த அதிருப்தியை சரிகட்ட காங்கிரஸ் தலைமை முயற்சி செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications