திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது.. காங்கிரஸ் கட்சி
Recommended Video
சென்னை: திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து நேற்றைய தினம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே என் நேரு சலசலப்புக்குரிய வகையில் பேசினார்.

அவர் பேசுகையில் காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என கூறியிருந்தார். இது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதற்கான பேச்சு என புரிந்து கொள்ளப்பட்டது.
இதையடுத்து கே என் நேரு தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். மற்றபடி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும் என நான் கூறவில்லை என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது. திமுகவுடனும் மதசார்பற்ற கட்சிகளுடனுமான கூட்டணி சிறப்பாக செயல்படும்.
மதுரை அல்லது நெல்லையில் வரும் ஜூலை 14-ஆம் தேதி தென் மாவட்டங்களின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்த இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார் அழகிரி.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications