EXCLUSIVE: நிதிஷ் போனது ‘இந்தியா’க்கே நல்லது.. காங்கிரஸ் தியாகம் செய்யவும் தயார் - பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: தேர்தலுக்கு முன்னரே நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் அடையாளம் காணப்பட்டது இந்தியா கூட்டணிக்கு சாதகம்தான் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
கேள்வி: 2024 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எப்படி தயாராகி உள்ளது?

பதில்: காங்கிரஸ் கட்சியின் முதல் வேலை மதச்சார்பற்ற சக்திகளை இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பது. அந்த அடிப்படையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள், மாநில உரிமைகளில் நம்பிக்கை கொண்ட சக்திகள், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட சக்திகள், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அரசியல் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு என பொது மேடையை உருவாக்கி அந்த அடிப்படையில் தேர்தலை சந்திப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வியூகம். இதற்காக பல தியாகங்களை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
பல மாநிலங்களில் இதுபோன்ற அரசியல் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே இடங்களை பங்குபோடுவதில் போட்டி இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிகளிடம் சமரசம் செய்து எல்லோரையும் உள்வாங்கி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் மாநில வாரியாக அமைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டிலும் தேர்தல் குழு அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கூட்டத்தை முடித்து அடுத்த கட்டத்துக்கு தயாராக உள்ளோம். எனவே நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் ஒரே முகமாக தேர்தலை சந்திப்போம்.
கேள்வி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் கூட்டணி சேரப்போவதாக தகவல் வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்து உள்ளன. இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
பதில்: நீங்கள் சொல்லும் 3 பேருமே பல காலகட்டங்களில் காங்கிரஸுடன் சேர்ந்து பணியாற்ற முன் வரவில்லை. கடந்த காலங்களில் இதே மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு முதன்மையான இடம் கிடைக்காதா என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தங்கள் அடையாளங்களை முழுமையாக தொலைத்துவிட முடியாத அளவுக்கு அடிப்படைக் கொள்கைகளில் எல்லாவற்றையுமே சமரசம் செய்துகொள்ள முடியாது.
இவர்களோடு சேர்ந்து களம் காண்பது வரவர நமக்கு எவ்வளவு ஆபத்தானது என்று தெரிய வருகிறது என்று சொன்னால், தேர்தலுக்கு முன்னரே இப்படி நிதானமற்றவர்களாக இருப்பவர்கள், தேர்தல் முடிந்த பின்னர் எப்படி இருப்பார்கள்? இவர்களை நம்பி எப்படி ஆட்சியமைக்க முடியும்? என்ற கேள்விகள் எல்லாம் வருகின்றன. எனவே இதுபோன்ற நபர்களை தேர்தலுக்கு முன்னரே அடையாளம் கண்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடியும் என்று எண்ணுகிறேன்.
இவர்கள் இல்லாமலேயே பாஜகவையும், வலதுசாரி பாசிச மதவாதத்தையும் வேறோடும் வேறடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பார்கள். அவர்களை நம்பித்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும். மதில்மேல் பூனை என்ற நிலையில் இருக்கும் இவர்களை நம்பி தேர்தலை சந்திக்க முடியாது. அந்த சவாலை காங்கிரஸ் சந்திக்க தயாராக உள்ளது. முடிவுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இவர்களின் உண்மையான முகத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டுவோம். நிச்சயமாக மக்கள் நல்லதொரு தீர்ப்பு அளிப்பார்கள் என்று நம்புவோம்." என்று தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications