“ஆளுநர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது" TVKவுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டம்
சென்னை: விஜய்யை பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை கண்டித்து செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்பதால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையே காங்கிரஸ் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்தது.

தான் ஆட்சியமைக்க ஆதரவு கோரி விஜய், காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுக்கு அழைத்து கடிதம் விடுத்தார். காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது. இதன் மூலம் தற்போது தவெகவிடம் 113 இடங்கள் இருக்கின்றன. எனவே தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தார். ஆனாலும் தனிப்பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லவில்லை எனக் கூறி அவரை பதவியேற்க ஆளுநர் அழைக்கவில்லை.
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மற்றும் பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தொண்டர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர். தவெகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அர்லேகர் அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக மற்றும் அவர்களின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார். அவர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications