பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்?
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதில் ராகுல்காந்தி முட்டுக்கட்டைப் போட்டதால் பட்டியல் ரிலீஸ் செய்வதில் டிலே ஆகிக்கொண்டிருக்கிரது. இன்றைக்கு எப்படியும் பட்டியல் ரிலீஸ் செய்யப்பட்டு விடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறது சத்தியமூர்த்திபவன்.
செல்வபெருந்தகை தயாரித்துக் கொடுத்த வேட்பாளர்கள் பட்டியலை ராகுல் காந்தி நிரகாரித்ததையும், புதிய பட்டியலை தயாரித்து அனுப்புங்கள் என்று ராகுல்காந்தி கோபம் காட்டியதையும் நாம் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தினோம்.

ராகுல் காந்தி நிராகரித்த பட்டியல்
திமுக கூட்டணியில் 28 சீட்டுகளை பெற்ற காங்கிரஸ் கட்சி, மனுத் தாக்கல் தொடங்கி விட்ட நிலையிலும் வேட்பாளர் பட்டியலை ரீலீஸ் செய்ய முடியவில்லை. தேசிய கட்சி என்பதால் அகில இந்திய தலைமையின் ஒப்புதல் அவசியம். அதன் பிறகே பட்டியல் ரிலீஸ் ஆகும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: 1. பொன்னேரி (தனி) 2. திருப்பெரும்புதூர் (தனி) 3. சோளிங்கர் 4. உதகமண்டலம் 5. ஏராடு கிழக்கு 6. அரந்தாங்கி 7. கடலூர் 8. மயிலாடுதுறை 9. காரைக்குடி 10. சிவகாசி 11. திருவாடனை 12. திருவைகுண்டம் 13. நாங்குநேரி 14. குளச்சல் 15. விளவங்கோடு 16. கிள்ளியூர் 17. வேளச்சேரி 18. ஊத்தங்கரை (தனி) 19. துறையூர் (தனி) 20. கவுண்டம்பாளையம் 21. ஆத்தூர் (தனி) 22. பென்னாகரம் 23. சிங்காநல்லூர் 24. அம்பாசமுத்திரம் 25. கிருஷ்ணகிரி 26. உசிலம்பட்டி 27. சங்கரன்கோவில் 28. மேலூர்
பொதுவாக, காங்கிரசில் எப்போதுமே வேட்பாளர் தேர்வு இழுத்துக் கொண்டே இருப்பது வாடிக்கையானது தான். கட்சியின் முன்னாள் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள்,. எம்.பி. க்கள் ஆகியரோடு கடந்த 28-ந்தேதி ஜூம் மீட்டிங் நடத்தினார் கிறிஸ் சோடங்கர். அப்போது, பாமகவின் கௌரவ தலைவர் ஜி. கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை காங்கிரசில் இணைத்து அவரை பென்னாகரம் தொகுதி வேட்பாளராக நியமிக்க செல்வப் பெருந்தகை முடிவு செய்துள்ளதை ஜூம் மீட்டிங்கில் விளாசித் தள்ளியிருக்கிறார் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.
அவர் பேசும் போது, '' தமிழ்க்குமரன் என்ன சச்சின் டெண்டுல்கரா? உடனே கட்சியில் சேர்த்து சீட் கொடுப்பதற்கு? யாருங்க இந்த தமிழ்க்குமரன்? காங்கிரசுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு எதற்கு சீட் ஒதுக்கணும். ஓ... இந்த நபருக்கு சீட் கொடுக்கத்தான் பென்னாகரத்தை திமுகவிடம் வாங்கப்பட்டதா? இதன் பின்னணியில் என்ன நடந்திருக்குன்னு எல்லாத்துக்கும் தெரியும் என்று மிக கடுமையாக விமர்சித்தார்.
அவருக்கு ஆதரவாக எம். பி. க்கள் சிலரும் வரிந்து கட்டியுள்ளனர். இதனால் ஜூம் மீட்டிங் ரொம்பவும் காரசாரமாக இருந்துள்ளன. இந்த குற்றச் சாட்டுகளுக்கு செல்வம் விளக்கம் அளிக்கத்த நிலையிலும் எம்.பி.க்கள் அசரவில்லை. ஏற்கனவே, காங்கிரசில் தொகுதி தேர்வும் வேட்பாளர் தேர்வும் விற்கப்படுகின்றன என்கிற ரீதியில் எம். பி. ஜோதிமணி சர்சையை கிளப்பியிருந்தார். இப்படி கட்சிக்குள் நிறைய கோஷ்டி மோதல்கள் நடந்து வருகின்றன.
இரண்டாவது பட்டியல்
இந்த நிலையில், இரண்டாவது பட்டியலை கொடுத்து விட்டு நேற்று முன் தினம் சென்னைக்கு வந்து விட்டார் செல்வப்பெருந்தகை.
அந்த பட்டியலை வைத்துக் கொண்டு கே.சி.வேணுகோபால், கிரிஸ் சோடங்கர் இருவரிடமும் விவாதித்திருக்கிறார் ராகுல். அவர்களிடம் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
காங்கிரஸ் சீட்டுகள் விலை பேசப்பட்டுள்ளன என்பது தொடங்கி, சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வாய்ப்புக்கேட்டு மல்லாடுவது வரைக்கும் அந்த ஆலோசனையில் விவாதிக்கப் பட்டுள்ளது. செல்வப்பெருந்தகைக்கு எதிரான புகார்கள்தான் அதிகம் விவாதிக்கவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டு முறை வேட்பாளர் பட்டியல் அடித்து அடித்து திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடும் நிலை இருப்ப தாக காங்கிரஸ் எம்.பி.க்கள் சொல்லி வருகின்றனர். டெல்லியில் நடக்கும் சம்பவங்கள், விவாதிக்கப்படும் விசயங்கள் அனைத்தையும் கணக்கிட்டு நம்மிடம் பேசும் காங்கிரசார், ''தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியிலிருந்து செல்வப் பெருந்தகை மாற்றப்படுவார்'' என்கின்றனர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை












Click it and Unblock the Notifications