கைகோர்த்த விஜய் – ராகுல்.. பதவியேற்பு நாளில் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ.. தவெகவினர் ஹேப்பி
சென்னை: தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கிறார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் விஜய் பதவியேற்பையொட்டி காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் விஜய் - ராகுல் காந்தி ஆகியோர் ஸ்டைலாக ஒன்றாக நடந்து வந்து கைகோர்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக போராடி திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றார்.

விஜய்க்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளில் தலா 2 எம்எல்ஏக்கள் என்று 8 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டி இல்லாததால் விஜய் ஆதரவு கோரினார். முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவுக்கரம் நீட்டியது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக உடன் கைகோர்த்தது. வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 லோக்சபா தேர்தலில் தவெக உடன் தான் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும் இன்று முதல்வராகும் விஜய்யின் பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதையடுத்து விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பெரும்பான்மை இருந்ததால் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
Tamil Nadu Cm @actorvijay with Future PM @RahulGandhi pic.twitter.com/l2qboTn6Ra
— Girish Chodankar (@girishgoaINC) May 9, 2026
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் விஜய் பதவியேற்பதையொட்டி காங்கிரஸ் கட்சி அவரையும், ராகுல் காந்தியையும் சேர்த்து வைத்து வீடியோ ஒன்று உருவாக்கி உள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ''தமிழ்நாடு முதல்வர் விஜய் உடன் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ மொத்தம் 49 வினாடிகள் நீளம் கொண்டது. வீடியோவில் விஜய்யும், ராகுல் காந்தியும் கூலிங் கிளாஸ், கோர்ட் அணிந்து ஸ்டைலாக தீப்பொறி பறக்க கைகோர்த்தபடி நடந்து வருகிறார்கள். வீடியோவில் தவெக கொடி மற்றும் காங்கிரஸ் கொடி வருகிறது. ஜோசப் விஜய், ராகுல் காந்தி என இருவரின் பெயர்களும் வீடியோவில் எழுதப்பட்டுள்ளது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications