திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் சூழல் நிலவிய நிலையில் டெல்லி தலைகள் தலையிட்டதால் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வில் செல்வப் பெருந்தகை சர்வாதிகாரி போல செயல்படுவதாகவும், தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட்டு ஒதுக்குவதாக கூறி போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். சிலர் டெல்லி தலைமையை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடாகி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. திமுக கூட்டணியில் நீண்ட காலம் பயணிக்கும் காங்கிரஸ் இந்த முறை கூட்டணியில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
காரணம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையுடன் அதிக சீட்டுகள், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி என பல்வேறு நெருக்கடிகளை காங்கிரஸ் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடும் சூழல் நிலவியது.

2026 சட்டசபை தேர்தல்
அப்போது ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர். நீண்ட இழுபறிகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் கூட வேட்பாளர்களின் பெயரை அறிவித்துவிட்டது.
திமுக கூட்டணி
ஆனால் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இதற்கு கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் தான் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்த காங்கிரஸ் வட்டாரத்தினர். மேலும் செல்வப் பெருந்தகைக்கு எதிராக ஒரு குரூப் களமிறங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை தற்போது எழுந்தது அல்ல, ஆரம்பத்தில் இருந்தே செல்வப் பெருந்தகைக்கு எதிராக ஒரு குரூப் செயல்பட்டு வந்தது.
ராகுல் காந்தி
குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஸ் சோடங்கர், செல்வப் பெருந்தகை மேல் அதிருப்தியில் தான் இருந்தார். திமுகவை தவிர்த்து வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் உடையும் சூழல் இருப்பதால் தான் திமுக கூட்டணிக்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் தொகுதி பங்கீட்டில் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். குறிப்பாக காங்கிரஸுக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு
ஆனால் காங்கிரஸ் வலுவாக இல்லாத சில தொகுதிகளை திமுக தள்ளிவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது காங்கிரசுக்கு 18 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் 16 தொகுதிகளை திரும்ப பெற்றுள்ளது. அதே நேரத்தில் தென்காசி, விருதாச்சலம் தொகுதிகளை காங்கிரஸ் இடம் இருந்து திமுக பறித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியிலும் காங்கிரஸ்தான் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் செல்வப் பெருந்தகை திரும்ப பெற்றுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது அதிருப்தி நிலவுகிறது.
ஜோதிமணி
சில தொகுதிகளை திமுகவிடம் கொடுத்து வேறு தொகுதிகளை கேட்டு பெற்று இருக்கலா.ம் ஆனால் திமுக கொடுத்த தொகுதிகளை அப்படியே பெற்றுக் கொண்டார் என்ற விமர்சனத்தை பொதுவெளியில் போட்டு உடைத்தார் கரூர் எம்பி ஆன ஜோதிமணி. "காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தொகுதி தேர்வில் வெளிப்படை தன்மையே இல்லை.. காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பை கட்சிக்கு ஒரு துரும்பினை கூட கிள்ளி போடாத சிலர் தின்பதை பார்க்க வேதனையாக உள்ளது" என வெடித்தார்.
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்களும் இதே மனநிலையில் தான் இருக்கின்றனர். தொகுதி பங்கீடு மட்டுமல்ல.. வேட்பாளர் தேர்விலும் செல்வப் பெருந்தகை திமுகவின் ஏஜென்ட் போலவே நடந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பார்க்க முடிகிறது. தொடர்ந்து செல்வ பெருந்தகை தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும், அவரை மாற்ற வேண்டுமென சில தலைவர்கள் டெல்லிக்குச் செல்ல இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு













Click it and Unblock the Notifications