ஆசையாக இருந்தாரே விஜய்.. இப்போ இப்படி ஆகிடுச்சே! கதறவிட்ட கதர் கட்சி.. எதிர்பார்த்து இருக்க மாட்டாரே
சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம், திமுக கூட்டணியை உடைக்கலாம் என்று ஆர்வமாக இருந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது. தவெக - காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை கட்சி தலைமையும் உறுதி செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் மற்றும் TVK இடையே கூட்டணி அமையலாம் என சமூக வலைத்தளங்களிலும், சில அரசியல் விமர்சகர்கள் மூலமாகவும் செய்திகள் பரவி வருகின்றன. காங்கிரஸ் - விஜய் பேசி வருகின்றனர்.. விஜய் ராகுல் காந்தியை சந்திக்க போகிறார்.. விரைவில் பேச்சுவார்த்தை நடக்க போகிறது.. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன,

கடந்த 24 மணி நேரமாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. தவெக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை கொடுக்க முன் வந்ததாக செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் தவெக விஜய் முன்வந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் 70 சீட்-துணை முதல்வர் பதவி என்பது தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்ட செய்தி என்று கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைமை மறுப்பு
தவெக - காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை கட்சி தலைமையும் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வலிமையாகவும், உறுதியாகவும் உள்ளது காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளியான தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிக சீட் கேட்க காங்கிரஸ் பிளான்
காங்கிரஸ் - தவெக விஜய் கூட்டணி தொடர்பான தகவல்களுக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லை என மூத்த அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்த, ஒரு சில காங்கிரஸ் தலைகள் இந்த உத்திகளைப் பயன்படுத்துகின்றன என்றே கருதப்படுகிறது.
திமுக கூட்டணி வட்டாரங்களின்படி, 2026 தேர்தலில் முந்தைய மாநிலத் தேர்தலை விட அதிக இடங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பேரம் பேச திட்டமிட்டுள்ளது. சில மாவட்டங்களில் தங்கள் அமைப்பு பலம் அதிகரித்துள்ளதாகவும், இதை திமுக அங்கீகரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் இடையே ஒரு கூட்டணி பற்றிய உறுதியற்ற செய்திகளை பரப்புவதன் மூலம், திமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியும். திமுக கேட்ட இடங்களை கொடுக்க மறுத்தால்.. தவெகவிடம் செல்வோம் என்று திமுகவிற்கு பிரஷர் போட முடியும் .
ஆனால், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் உடன் கைகோர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே திமுக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தி, அவர்களுக்கான வாக்கு வங்கி உறுதி செய்யப்படவில்லை, இதனால் காங்கிரஸ் அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. திமுக உடன் அவர்கள் வைத்து இருப்பது வெற்றி கூட்டணி என்று திமுக தரப்பு கருதுகிறது.
காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் வெவ்வேறு வாக்காளர் தளங்களைக் கொண்டுள்ளதால், திடீர் கூட்டணி சித்தாந்த ரீதியாக வெற்றிபெறாது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications