ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. டிடிவி தினகரன் கூட்டணி கனவு கலைந்தது.. தனித்துவிடப்பட்டார்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு.
இந்த சந்திப்பின் மூலமாக, பாஜகவிற்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் பாதி கிணறை சந்திரபாபு நாயுடு தாண்டிவிடப்போகிறார்.
இதில் மற்றொரு அம்சம், காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் வலிமையடையப் போகிறதே தவிர, உடையப்போவதில்லை என்பதுதான்.
[விஜய்க்கு இருக்கும் செல்வாக்குக்கு யாரையும் அசைக்க முடியும்... பழ. கருப்பையா தடாலடி!]

காங்கிரஸ் திட்டம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன் கை கோர்த்துக்கொண்டு, திமுகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கடந்த பல மாதங்களாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ஏற்பதான், நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. இப்படி கூட்டணிக்குள் பிளவு ஏற்படுவது பாஜகவிற்கும், அதிமுகவிற்கும்தான் பலன் அளிக்கும் என்று கூறி வந்தனர் அரசியல் பார்வையாளர்கள்.

மெகா கூட்டணி
இந்த நிலையில்தான், சந்திரபாபு நாயுடுவின் முயற்சிகள், இந்த யூகங்களுக்கு முடிவு கட்டியுள்ளன. ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மெகா கூட்டணியை உறுதி செய்த சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு முக்கிய கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். பெங்களூரில் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவகவுடாவையும், அக்கட்சியை சேர்ந்தவரான, கர்நாடக முதல்வரையும் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய சந்திரபாபு நாயுடு, இன்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தினகரனுக்கு கல்தா
இதன் மூலம், காங்கிரஸ்-திமுக கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்த உள்ளார் நாயுடு. எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவாகி வரும் நிலையில், டிடிவி தினகரனை தங்கள் கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் மறைமுகமாக இதை தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் தினகரன் கூட்டணியை விரும்பவில்லை என தெரிவித்துள்ளன. எனவே தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார். கமல்ஹாசன் கட்சிக்கும் இதே நிலைதான் என்றபோதிலும், தினகரனிலிருந்து கமல் கட்சி ஒரு விஷயத்தில் மாறுபட்டது.

கமலுக்கு வாய்ப்பு?
தினகரனை பொறுத்தளவில், பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என கூறியவர். திமுகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என மறைமுகமாக கூறியவர். ஆனால் கமல்ஹாசன், இதுவரை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. சமீபத்தில் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications