தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு.. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது!
சென்னை: விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் ஆதரவு கொடுக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் விஜய் கட்சி 108 இடங்களில் வென்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட இது 10 இடங்கள் குறைவாகும். இதனால் மற்ற கட்சிகளுடன் பேசி, மேஜிக் நம்பரை எட்டும் முயற்சியில் தவெக இறங்கியுள்ளது. அதில் காங்கிரஸ் தவெக பக்கம் போகலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஏனென்றால் தமிழ்நாடு தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸில் பல தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினர். இருப்பினும், தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள சில மூத்த தலைவர்கள் அழுத்தம் காரணமாகவே அந்த முடிவைக் கைவிடப்பட்டது. காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்தது. இருப்பினும், அந்த இணக்கம் காணப்படவில்லை. ராகுல்- ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் கூட செய்யவில்லை.
இதனால் கூட்டணியில் விரிசல் என்ற தகவல்கள் அப்போதே வந்த நிலையில், இப்போது கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.. காங்கிரஸ் இந்த தேர்தலில் 5 இடங்களில் வென்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெக உடன் கூட்டணி அமைத்துள்ளது.
நேற்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லி காங்கிரஸ் மேலிடம் இன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றே காங்கிரஸின் வேணுகோபால் கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் கிட்டத்தட்ட திமுக காங்கிரஸ் கூட்டணி முறிவது உறுதியாகவிட்டது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல் இந்த கூட்டணி தொடர் வெற்றிகளைக் கண்டு வந்த நிலையில், காங்கிரஸ் விலகுகிறது.
விஜய் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தரலாம் என்று சொல்லப்படுகிறது. அதன்படி நடந்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications